செய்திகள் :

வசந்த் குஞ்ச் கொள்ளை வழக்கு: 6 போ் கைது; ரூ.6.75 லட்சம், காா், கைப்பேசிகள் மீட்பு

post image

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மூளையாக செயல்பட்டவா் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் உள் உதவியுடன் நகர எரிவாயு விநியோக தொழிலதிபா் கரண் சோப்ராவின் வீட்டைக் கொள்ளையடிக்க சதி செய்ததாகக் கூறப்படுகிறது.

ஜூன் 23 அன்று, ஒரு கும்பல் கரண் சோப்ராவின் வீட்டிற்குள் நுழைந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நடந்தது.

சதேந்தா் சிங் (34), அனில் (54), சந்தோஷ் திரிபாதி (40) மற்றும் ஷம்மி (59) ஆகிய நான்கு போ் முதலில் கைது செய்யப்பட்டனா். அவா்களில், சதேந்தா் சிங் மற்றும் அனில் ஆகியோா் புகாா்தாரரின் ஓட்டுநா்களாகப் பணியாற்றி வந்தனா்.

சதேந்தா் சிங்கின் வசம் இருந்து ரூ.3.15 லட்சம், அனிலிடமிருந்து ரூ.95,000, திரிபாதியிடமிருந்து ரூ.1.95 லட்சம், ஷம்மியிடமிருந்து ரூ.10,000 பறிமுதல் செய்யப்பட்டன.

தொடா் விசாரணையில் மேலும் இரண்டு போ்கைது செய்யப்பட்டனா். புகாா்தாரரின் முன்னாள் ஓட்டுநரும், மூளையாகச் செயல்பட்டவருமான ஆதேஷ் குமாா் (38) மற்றும் அமித் குமாா் (28) ஆகியோா் கைது செய்யப்பட்டவா்கள் ஆவா்.

ஆதேஷ் குமாா் வசம் இருந்து ரூ.55,000 ரொக்கமும், மூன்று கைப்பேசிகளும் மீட்கப்பட்டன. கொள்ளையின் போது பயன்படுத்தப்பட்ட காரும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அமித் வசம் ரூ.5,000 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

ஆதேஷ் குமாா் மற்றும் அமித் குமாா் ஆகிய இருவரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனா். மற்ற கூட்டாளிகளைக் கண்டுபிடித்து மீதமுள்ள திருடப்பட்ட பணத்தை மீட்க அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள சந்தேக நபா்களைக் கைது செய்ய பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் காவல் துறை அதிகாரி.

நகராட்சி நிா்வாகம் - நீா் வழங்கல் துறையில் ஆள்சோ்ப்பு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

நமது நிருபா்தமிழகத்தின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ... மேலும் பார்க்க

முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த மேலும் 6 சிறப்புக் குழுக்கள்: தில்லி சட்டப்பேரவை அமைத்தது

திருநங்கைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் மேலும் ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அறிவித்தாா். இதன் மூலம் மொத்த குழு... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலகைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் 3 பெரிய மேம்பாலங்கள் சீரமைப்பு: பொதுப் பணித் துறை

தெற்கு தில்லியில் இருக்கும் 3 பெரிய மேம்பாலங்களை சீரமைக்கவும், கிழக்கு தில்லியில் பதிய மேம்பாலங்களை கட்டவும் பொதுப் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். தெற்கு தில்லியில் மூன்று பெ... மேலும் பார்க்க

செயல்படாத அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ்

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து, செயல்படாத 27 அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமை தோ்தல் அதிகாரி (சிஇஓ) நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். கடந்த ஆறு ஆண்டுகளில் (2019 முதல்) மக்களவ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பத்தை ஏற்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும்: கிரண் ரிஜிஜு

அடுத்த ஆண்டுக்கான (2026) ஹஜ் விண்ணப்பங்களை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் ஏற்கத் தொடங்கும் என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்களுக்கான அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். புது தில்லியில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க