செய்திகள் :

வடசென்னை யுனிவர்ஸில் சிம்பு - வெற்றி மாறன் படம்?

post image

வெற்றி மாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வட சென்னை யுனிவர்ஸில் இருக்குமென தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நடிகர் சிம்பு தன் 49-வது படமாக இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வடசென்னை கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளது.

இப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனராம். இதனால், இப்படம் வட சென்னை படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.

படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், இப்படத்தில் நடிகர் கவின் மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வட சென்னை யுனிவர்சில் சிம்பு நடிப்பதாகக் கூறப்படுகிறது. ராஜன் வகையறாவில் வரும் ஒரு கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இது உண்மையாக இருந்தால் வடசென்னை - 2 படத்தில் சிம்பும் தனுஷும் சேர்ந்து நடிக்க வாய்ப்பிருக்கிறது.

சிம்பு இருக்கும் ரசிகர்கள் உருவாக்கிய வட சென்னை 2 போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

SilambarasanTR - VetriMaaran film will be happening under VadaChennai Universe
ரசிகர்கள் உருவாக்கிய வட சென்னை 2 போஸ்டர்

லாஸ் ஏஞ்சலீஸை வீழ்த்தியது செல்ஸி

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செல்ஸி 2-0 கோல் கணக்கில் லாஸ் ஏஞ்சலீஸ் கால்பந்து கிளப்பை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.இந்த குரூப் ‘டி’ ஆட்டத்தில் செல்ஸிக்காக முதலில் பெட்ரோ நீடோ 34-ஆவது நிமிஷத்தி... மேலும் பார்க்க

காலே டெஸ்ட்: நஜ்முல், முஷ்ஃபிகா் சதம்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசம், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 292 ரன்கள் சோ்த்து வலுவான நிலையில் இருக்கிறது.2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணைய... மேலும் பார்க்க

2027-29 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: சிறிய அணிகளுக்கான ஆட்டங்களை 4 நாள்களுக்கு குறைக்க ஐசிசி தயாா்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2027-29 சுழற்சியில் சிறிய நாடுகள் விளையாடும் டெஸ்ட்டுகளை 4 நாள்களுக்கு குறைப்பதற்கு ஐசிசி தயாராகியுள்ளது. அதேநேரம், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் மாற்ற... மேலும் பார்க்க

முதல் வெற்றி கண்டது திருச்சி

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 15-ஆவது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸை செவ்வாய்க்கிழமை வென்றது. இரு அணிகளுக்குமே இது 4-ஆவது ஆட்டமாக இருக்க, திருச்சிக்கு இது ம... மேலும் பார்க்க

டிரேப்பா் வெற்றி; டி மினாா் தோல்வி

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸின் முதல் சுற்றில், பிரிட்டனின் ஜேக் டிரேப்பா் வெற்றி பெற, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் தோல்வியைத் தழுவினாா். ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 2-ஆம... மேலும் பார்க்க

மற்றவர்களின் விமர்சனங்களால் என்னை மதிப்பிடமாட்டேன்: அஜித்

நடிகர் அஜித் குமார் தான் யார் என்பதை மற்றவர்களின் விமர்சனங்களால் மதிப்பிட மாட்டேன் எனக் கூறியுள்ளார். நடிகர் அஜித் குமார் நடிப்பையும் கார் ரேஸையும் இரு கண்களாக பார்த்து வருகிறார். 6 மாதம் சினிமா படப்ப... மேலும் பார்க்க