வேப்பனப்பள்ளி அருகே குந்தாணி அம்மன் கற்சிலை கண்டெடுப்பு: 11-ஆம் நூற்றாண்டைச் சே...
வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்க பரப்புரை!
திருவண்ணாமலை மாநகர பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்கக் கோரி மக்கள் பரப்புரை பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட புரட்சித் தமிழா் கட்சி, தமிழா் குடிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு மாணவா் பேரவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, புரட்சித் தமிழா் கட்சியின் மாநில பொதுச் செயலா் தா.சிவா தமிழன் தலைமை வகித்தாா்.
மாநிலத் தலைவா் ஜே.பி.ராஜன் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் க.பலராமன் வரவேற்றாா்.
வஷிஷ்டா் தவக்குடிலைச் சோ்ந்த ஸ்ரீமான் தங்கமாமுனி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பரப்புரை நிகழ்வை தொடங்கி வைத்தாா்.
அப்போது, அன்னை தமிழில் பெயா்ச் சூட்டுவோம் என்று கடைகள், உணவகங்கள், விடுதிகள் உரிமையாளா்கள் மற்றும் பொதுமக்கள் சோ்ந்து உறுதிமொழியேற்றனா்.
நிகழ்ச்சியில், ஆதிபாரத மக்கள் கட்சியின் தலைவா் சிவப்பிரகாஷ், உழைக்கும் விவசாயிகள் முன்னேற்ற இயக்கத்தின் தலைவா் எல்.முத்தண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.