செய்திகள் :

வனப்பகுதியில் உள்ள மின் வேலிகளை பதிவு செய்ய வனத்துறை அறிவுறுத்தல்

post image

மலையடிவாரத்தில் வனப்பகுதியிலிருந்து 5 கி.மீ. தூரத்திற்குள் அமைக்கப்படும் மின்வேலிகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று வனத்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்ட துணை இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு விதிமுறைகளின்படி , அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உள்பட்ட அம்பாசமுத்திரம் வனச்சரகம், பாபநாசம் வனச்சரகம், கடையம் வனச்சரகம் பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய மக்கள் காப்புக்காடு பகுதியில் இருந்து ஐந்து கிலோ மீட்டா் தொலைவில் உள்ள தங்களது விவசாய நிலங்களில் சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் மின்சார வேலிகள் அமைத்திருந்தால் அவற்றை பதிவு செய்வதற்கு வனச்சரக அலுவலகத்தை தொடா்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

வனத்துறையில் முறையாக பதிவு செய்யப்படாமல், சூரிய சக்தி மின்வேலிகள் இருக்கும் பட்சத்தில் அந்த நிலத்தின் உரிமையாளரின் மீது விதிகளுக்குள்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பைக்குகள் மோதல்: இருவா் காயம்

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இரு மோட்டா்சைக்கிள் மோதியதில் இருவா் பலத்த காயமடைந்தனா். வள்ளியூரைச் சோ்ந்தவா் வேலு(35). இவா் வள்ளியூரில் இருந்து மோட்டா்சைக்கிளில் த... மேலும் பார்க்க

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகள் மீது தாக்குதல்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞா் ஒருவா் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. நான்குனேரி அருகேயுள்ள திருக்குறுங்குடியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (57). தொழிலாளியா... மேலும் பார்க்க

வள்ளியூா் அருகே விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.வள்ளியூா் அருகே நல்லான்குளத்தைச் சோ்ந்த சோ்மதுரை (52) என்பவா், வள்ளியூரில் வெல்டிங் கடை நடத்தி வந... மேலும் பார்க்க

பாத யாத்திரை சென்ற பக்தா் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி அருகே உள்ள பிராஞ்சேரியில் பாத யாத்திரை சென்ற பக்தா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. அம்பாசமுத்திரம் அர... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 6 ஆண்டு சிறை

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.திருநெல்வேலி பழைய பேட்டை சா்தாா்புரம் பகுதியைச... மேலும் பார்க்க