செய்திகள் :

`வனப்பகுதியில் நின்ற காரில் ரூ.11 கோடி பணம், 52 கிலோ தங்கம்’ - கான்ஸ்டபிள் பில்டர் ஆனது எப்படி?

post image

மத்திய பிரதேசத்தில் கடந்த 19-ம் தேதி மந்தோரி வனப்பகுதியில் கேட்பாரற்று நின்ற காரில் ரூ.11 கோடி பணம், 52 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பலத்த ஆயுதங்களுடன் அவற்றை அடர்ந்த வனப்பகுதி வழியாக கொண்டு சென்ற போது அவர்கள் காரை அப்படியே விட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர் என்ற தகவல் வெளியானது. அந்த காரை பறிமுதல் செய்த வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கார் யாருக்கு சொந்தமானது என்று விசாரித்த போது அது சேதன் கவுர் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. சேதன் கவுர் பிரபல பில்டர் செளரப் சர்மா என்பவரது நெருங்கிய கூட்டாளி என்று தெரிய வந்துள்ளது.

அவரை பிடித்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையில் பிடிபட்ட கார் சேதன் பெயரில் இருந்தாலும் அதனை பில்டர் செளரப் சர்மாதான் பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. செளரப் சர்மா சாதாரண கான்ஸ்டபிளாக தனது வாழ்க்கையை தொடங்கினார்.

அதுவும் செளரப் சர்மாவின் தந்தை அரசு துறையில் டாக்டராக பணியாற்றினார். அவர் கடந்த 2015-ம் ஆண்டு பணியில் இருந்த போது இறந்தார். இதனால் செளரப் சர்மாவிற்கு கருணை அடிப்படையில் போக்குவரத்து துறையில் கான்ஸ்டபிள் வேலை கிடைத்தது. ஆனால் போக்குவரத்து துறையில் ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்த செளரப் சர்கா தனது மனைவி, தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கல்வி நிறுவனங்கள் தொடங்கினார்.

2023-ம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு போபாலில் உள்ள முக்கிய பில்டர்களுடன் சேர்ந்து கொண்டு ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டிப்பறக்க ஆரம்பித்தார்.

மத்திய பிரதேச லோக் அயுக்தா அதிகாரிகள் செளரப் சர்மாவின் வீட்டில் ரெய்டு நடத்தி 7.98 கோடி மதிப்பிலான பணம் மற்றும் வெள்ளியை பறிமுதல் செய்தனர். அதே நாளில் தான் 52 கிலோ தங்கம் மற்றும் 11 கோடி பணத்தை அதிகாரிகளிடம் இருந்து மறைக்க எடுத்துச்சென்ற போது காட்டிற்குள் விட்டுச்சென்றிருக்கலாம். இதனால் ஒரே நேரத்தில் சர்மாவிற்கு எதிராக அமலாக்கப்பிரிவு, வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் மாநில லோக் ஆயுக்தா போன்றவை விசாரணை நடத்தி வருகின்றன. ரெய்டின் போது பறிமுதல் செய்யப்பட்ட டைரி ஒன்றில் 100 கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை செய்தது தொடர்பான தகவல்கள் இருக்கிறது. அதில் பல முக்கிய பிரமுகர்களின் பெயர்களும் இருக்கிறது.

அதோடு பினாமி பெயரில் பல சொத்துக்களை செளரப் வாங்கி இருப்பதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் யாரும் இதில் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சர்மா துபாயிக்கு தப்பிச்சென்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவரை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்: போலி மருத்துவ மாஃபியா; 10-ம் வகுப்பு படித்துவிட்டு மக்களுக்குச் சிகிச்சை.. சிக்கிய கும்பல்!

குஜராத் மாநிலம், சூரத்தில் தகுந்த கல்வித்தகுதி இல்லாமல் மருத்துவம் பார்த்துவந்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். சூரத் நகரில் போலி டாக்டர்களை கட்டுப்படுத்த எடுக்கப்படும் த... மேலும் பார்க்க

மும்பை: 13 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர்; மனைவியுடன் கைது!

மும்பை அருகில் உள்ள கல்யான் என்ற இடத்தில் வசிக்கும் 13 வயது சிறுமி திங்கள்கிழமை மாலை வீட்டில் தனது தாயாரிடம் பணம் வாங்கிக்கொண்டு, கடையில் உணவுப்பொருள் வாங்கச் சென்றார். அவர் சென்ற பிறகு நீண்ட நேரமாக வ... மேலும் பார்க்க

தஞ்சாவூர் டு இலங்கை; கடல் வழியாக கடத்த திட்டம்.. ரூ.20 லட்சம் மதிப்பிலான கஞ்சாவுடன் சிக்கிய கும்பல்!

தஞ்சாவூர் கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக புகார் எழுந்து வந்தது. போலீஸாரும் கஞ்சா கும்பலை பிடிப்பதற்கு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தஞ்ச... மேலும் பார்க்க

ரூ.21 கோடி: அரசு பணத்தைக் கையாடல் செய்து BMW கார், பைக்... காதலிக்கு சொகுசு வீடு - தலைமறைவான நபர்!

மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சாம்பாஜி நகரைச் சேர்ந்தவர் ஹரீஷ் குமார். இவர் அங்குள்ள ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தார். அவரது சம்பளம் மாதம் ரூ.13 ஆயி... மேலும் பார்க்க

லிஃப்ட் கொடுத்து 18 மாதங்களில் 11 பேர் கொலை; பஞ்சாப்பை அதிரவைத்த தன்பாலின ஈர்ப்பாளர்!

பஞ்சாப் மாநிலத்தில் தொடர் கொலையில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அங்குள்ள மணாலி ரோட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில்... மேலும் பார்க்க

ராஜபாளையம்: போதையில் பெண் போலீஸிடம் பாலியல் அத்துமீறல்; எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்!

பெண் போலீஸிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிறப்பு சார்பு ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து விருதுநகர் மாவட்ட காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிட... மேலும் பார்க்க