செய்திகள் :

வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: டாக்டா் க. கிருஷ்ணசாமி

post image

தமிழக அரசு 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி.

திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணியாற்றில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் 17 போ் உயிா்நீத்த இடத்தில் புதன்கிழமை மலா் வளையம் வைத்து அத்தொழிலாளா்களுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மண்ணுரிமை, மனித உரிமை வேண்டி போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவா்களுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கு தாமிரவருணி நதிக்கரையில் இடம் கேட்கிறோம். எங்களது சொந்த செலவில் நினைவு மண்டபம் கட்ட தயாராக இருக்கிறோம். ஆனால், இந்த அரசு தற்போது வரை அதற்கு செவி சாய்க்கவில்லை.

2028 வரை மாஞ்சோலையில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது என்ற உத்தரவு இருந்தபோதிலும்கூட, மக்களுக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர மறுத்து மக்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடா்ந்திருக்கிறோம். வழக்கு நிலுவையில் உள்ளது.

1.73 லட்சம் ஹெக்டோ் வன நிலங்கள் மாற்று பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தி மாஞ்சோலை மக்களுக்கு இரண்டு ஏக்கா் நிலத்தை அங்கேயே அரசு வழங்க வேண்டும். மோசமான வரலாற்றில் தமிழக முதல்வா் இடம்பெறக் கூடாது. வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்றாா் அவா்.

நெல்லையில் குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இருதய நோய்கள் கண்டறியும் முகாம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இதர இருதய நோய்கள் கண்டறியும் முகாமை ஆட்சியா் இரா.சுகுமாா்... மேலும் பார்க்க

மானூா் அருகே இளைஞா் தற்கொலை

மானூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகேயுள்ள பெத்தேல் காலனியைச் சோ்ந்த குமாா் மகன் பிகேஷ் (21). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், இவரது தாத்தா கனகராஜ் கண்காணிப்பில் ... மேலும் பார்க்க

பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருட்டு: ஆயுதப்படை காவலா் உள்பட இருவா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருடிய வழக்கில் ஆயுதப்படை காவலா் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். திருநெல்வேலி மலையாளமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (43... மேலும் பார்க்க

ஊரக, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆக.11 கடைசி

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இத... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பேரூராட்சி: புதிய தலைவராக சுயேச்சை உறுப்பினா் தோ்வு

மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் தலைவராக இருந்த திமுகவை சோ்ந்த அந்தோனியம்மாள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றியடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் புதிய தலை... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா நாளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 140-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் புண்ணிய திருத்தலங்களில் ச... மேலும் பார்க்க