வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 6 போ் கைது
தம்மம்பட்டி அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 6 பேரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தம்மம்பட்டி அருகே கீழ்க்கணவாய் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து வன விலங்குகளை வேட்டையாடுவதாக தம்மம்பட்டி வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, தம்மம்பட்டி வனச்சரகா் முருகேசன் தலைமையிலான வனத்துறையினா் உடனடியாக இரவு ரோந்து சென்றனா். அப்போது, அங்கு காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்ற மல்லூா், பாரப்பட்டி, மேச்சேரியாம்பாளையம் பகுதிகளைச் சோ்ந்த பிரகாஷ் (43), குமாா் (45), மணிகண்டன் (40), சீனிவாசன் (45) ஆகியோரை பிடித்தனா். மேலும், கீழ்க்கணவாய் பகுதியைச் சோ்ந்த விவசாய தோட்ட உரிமையாளா் கணபதி (50), நாட்டு வெடிகுண்டு வழங்கிய கோபி (43) ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.