செய்திகள் :

வயநாடு: அனுமதி பெறாத தங்கும் விடுதி; பெண்ணின் தலையில் சரிந்த கூரை; சோகத்தில் முடிந்த சுற்றுலா

post image

வயநாடு நிலச்சரிவு பேரழிவுக்குப் பிறகு சுற்றுலாத்துறையும் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.

மீண்டும் சுற்றுலாவை மேம்படுத்த வயநாடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது கோடை சீசன் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

சரிந்து விழுந்த கூரை
சரிந்து விழுந்த கூரை

இந்த நிலையில், கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் குழுவாக வயநாடு சுற்றுலா சென்றுள்ளனர்.

மேப்பாடி அருகில் உள்ள தொள்ளாயிரம் கண்டி பகுதியில் ஜிப் லைன், கண்ணாடி பாலம் எனக் கவர்ந்திழுக்கும் வகையில் இயங்கி வந்த தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.

தங்கும் விடுதி வளாகத்தில் புற்களால் கூரை வேயப்பட்ட குடிலைத் தேர்வு செய்து தங்கியிருக்கிறார் பெண் ஒருவர்.

இரவு தூங்கிக் கொண்டிருந்த வேளையில் அந்த பெண் மீது கூரைப் பெயர்ந்து விழுந்திருக்கிறது. காயத்துடன் தவித்த அந்தப் பெண்ணை மீட்டு மேப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக 2 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்துத் தெரிவித்துள்ள வயநாடு காவல்துறையினர், "மலப்புரம் பகுதியைச் சேர்ந்த நிஷ்மா என்கிற 24 பெண் தங்கியிருந்த குடிலின் கூரை அவர் மீதே சரிந்து விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.‌

காவல்துறை மற்றும் ஊராட்சி தரப்பில் விசாரணை மேற்கொண்டதில் முறையான அனுமதி இல்லாமல் அந்த தங்கும் விடுதி செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

விடுதி மேலாளர் சுசீந்திரன், மேற்பார்வையாளர் அனுராக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.

உயிர் இழந்த இளம் பெண்
உயிர் இழந்த இளம் பெண்

இது குறித்துத் தெரிவித்துள்ள வயநாடு காவல்துறையினர், "மலப்புரம் பகுதியைச் சேர்ந்த நிஷ்மா என்கிற 24 பெண் தங்கியிருந்த குடிலின் கூரை அவர் மீதே சரிந்து விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.‌

காவல்துறை மற்றும் ஊராட்சி தரப்பில் விசாரணை மேற்கொண்டதில் முறையான அனுமதி இல்லாமல் அந்த தங்கும் விடுதி செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

விடுதி மேலாளர் சுசீந்திரன், மேற்பார்வையாளர் அனுராக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மும்பை: குடிபோதையில் தகராறு; இரு குடும்பத்தினர் மோதிக்கொண்டதில் 3 பேர் படுகொலை

மும்பை தகிசர் கண்பத் நகர் குடிசைப்பகுதியில் வசித்தவர் ஹமித் ஷேக்(49). இவரது வீட்டிற்கு அருகில் ராம் குப்தா(50) என்பவர் வசித்து வந்தார். இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்தது. இருவரு... மேலும் பார்க்க

ஈரோடு: `வயதான தம்பதிகளை கொன்றது ஏன்?’ தோட்டத்து வீடு கொலை வழக்கில் நால்வர் கைது - பகீர் பின்னணி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேமலைக்கவுண்டன்புதூரில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி ... மேலும் பார்க்க

`தங்க நகைக்காக தங்கையுடன் சேர்ந்து மாமியாரை கொடூரமாகக் கொன்ற மருமகள்' - பதற வைக்கும் பின்னணி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள வீரப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முகமது - மைமூனா தம்பதி. தனியார் பள்ளி ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்திருக்கிறார் முகமது. போலீஸ் விசாரணைமுகமது வேலை ... மேலும் பார்க்க

Scam Alert: ஆன்லைன் ஆர்டர் டெலிவரி அட்டைப்பெட்டியை வைத்து பணமோசடி; பகீர் பின்னணியும் தற்காப்பும்

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த மோசடி இப்போது பரவலாகிவிட்டது.`கார்டு மேலே இருக்கும் 16 நம்பர் சொல்லு...' `உன் பேங்க் அக்கவுண்ட் லாக் ஆயிடுச்சி' என அறைகுறை தமிழில் பேசியவர்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்... மேலும் பார்க்க

பெரம்பலூர்: வீட்டு ரசீது வழங்க ரூ.25,000 லஞ்சம்; நகராட்சி வருவாய் ஆய்வாளர் சிக்கிய எப்படி?

பெரம்பலூர், ஆலம்பாடி ரோடு அன்பு நகரைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது மனைவி மகேஸ்வரி. இவர், தற்போது பெரம்பலூர் நகர்ப்பகுதியில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார்.அந்த வீட்டிற்கு நகராட்சியில் ரசீது போடுவதற்கா... மேலும் பார்க்க

கரூர்: சுற்றுலா வாகனம் மீது சொகுசு பேருந்து மோதி விபத்து; 5 பேர் பலி; நிவாரணம் அறிவித்த முதல்வர்

கரூர், செம்மடை அருகே கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்த சொகுசு பேருந்து டிராக்டர் மீது மோதி சென்டர் மீடியனில் ஏறி இறங்கியது. இதில் எதிரில் வந்த சுற்றுலா வாகனத்தில் (... மேலும் பார்க்க