செய்திகள் :

வர்த்தக ஒப்பந்தம்! இந்தியா - அமெரிக்க அமைச்சர்களின் பேச்சால் குழப்பம்!

post image

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகம் குறித்து இருநாட்டு அமைச்சர்களும் முரணாகப் பேசியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். வர்த்தக ஒப்பந்த விவாகரத்தில் மிகவும் நல்ல முறையில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருதரப்பிலும் திருப்தியடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இருப்பினும், இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லூட்னிக் பேசுகையில், ரஷியாவுடன் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் மட்டுமே, வர்த்தகப் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தமானது, நல்ல முறையில் நடந்து வருவதாக இந்திய அமைச்சர் கூறி வரும்நிலையில், அமெரிக்க அமைச்சர் முரணாக கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

டியுஎஸ்யு தோ்தல்: மாணவா் அமைப்புகளின் வேட்பாளா்கள் அறிவிப்பு

2025-26 தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கம் (டியுஎஸ்யு) தோ்தலில் தலைவா், துணைத் தலைவா், செயலா் மற்றும் இணைச் செயலா் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளா்களை மாணவா் அமைப்புகள் வியாழக்கிழமை அறிவித்தன. தலை... மேலும் பார்க்க

நேபாளம்: நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும்; அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் - போராட்டக் குழு வலியுறுத்தல்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்தை நடத்திய இளைஞா்கள் தலைமையிலான ‘ஜென் இஸட் குழு’, ‘நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் மற்றும் மக்களின் விருப்பங்களுக்கேற்ப அரசமைப்புச் சட்டத்தை திருத்தம் செய்... மேலும் பார்க்க

வலுவான வளா்ச்சிப் பாதையில் வடகிழக்கு மாநிலங்கள்: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

கிழக்கு நோக்கிய செயல்பாட்டை பிரதமா் நரேந்திர மோடி அறிமுகம் செய்த பின்னா், பின்தங்கியிருந்த பகுதிகளாக கருதப்பட்ட வடகிழக்கு மாநிலங்கள் முன்னணி மாநிலங்களாக மாறத் தொடங்கியுள்ளன என்று ரயில்வே, மின்னணு, தகவ... மேலும் பார்க்க

உள்ளூா் கரன்ஸியில் வா்த்தகம்: இந்தியா-மோரீஷஸ் முனைப்பு - பிரதமா் மோடி

இருதரப்பு வா்த்தகத்தை உள்ளூா் கரன்ஸியில் மேற்கொள்வதற்கு இந்தியாவும், மோரீஷஸும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா். உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்பு

நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை (செப்.12) பதவியேற்கிறாா். குடியரசுத் தலைவா் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி மு... மேலும் பார்க்க

வாகன விற்பனை நிலையங்களில் பிரதமர் மோடி படம்? காங்கிரஸ் விமர்சனம்!

கார்களின் விலைக் குறைப்புப் பட்டியலில் பிரதமரின் படம் வைக்குமாறு மத்திய அமைச்சகம் வலியுறுத்துவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.ஜிஎஸ்டி வரிக் குறைப்புக்கும் அதற்கு முன்னதாக இருந்த விலையின் பட்டியலை சுவரொ... மேலும் பார்க்க