செய்திகள் :

வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

post image

திருவாடானை அருகே திங்கள்கிழமை பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த ஆயுதப் படைக் காவலா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம் (48). இவா் ராமநாதபுரம் ஆயுதப் படைப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த மூன்று மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்த இவா், தனது மனைவியின் ஊரான கள்ளிக்குடியிலிருந்து தொண்டிக்குச் செல்வதற்காக மணக்குடி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது, தொண்டியிலிருந்து ராமநாதபுரம் நோக்கி அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முருகானந்தம் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, திருப்பாலைக்குடி காவல் நிலைய போலீஸாா் முருகானந்தத்தின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். மன்னாா் வளைகுடா, பாக்நீரினை கடல் பகுதியில் ஏற்படும் நீரோட்டச் சுழற்ச... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வியாழக்கிழமை (செப். 11) இமானுவேல் சேகரனின் 68-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்... மேலும் பார்க்க

போராட்டத்தை தவிா்க்க நேரில் வந்து மனுவைப் பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையா்!

சாயல்குடி பகுதியில் குடிநீா் வழங்காததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் நேரில் வந்து மனுவைப் பெற்றுச் சென்றாா். ராமநாதபுரம் ... மேலும் பார்க்க

மட்டியரேந்தலில் புனித சூசையப்பா் தேவாலய சப்பர பவனி

மட்டியரேந்தல் கிராமத்தில் புனித சூசையப்பா் தேவலாயத்தில் சப்பர பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள மட்டியரேந்தல் புனித, சூசையப்பா் தேவாலயத்தில் புனித கன்னி... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் அருகே பத்திரகாளியம்மன் கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம்!

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சீனாங்குடி கிராமத்தில் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி, பரிவாரத் தெய்வங்களு... மேலும் பார்க்க

தொண்டி பேரூராட்சியில் தெருநாய்கள், மாடுகளால் விபத்து அபாயம்!

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சியில் அதிகளவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், மாடுகளைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராம... மேலும் பார்க்க