உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்- கொலீஜியம் பரிந்துரை
வாகன விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே நுழைவுப் பால மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி நாகம்பட்டி காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சேதுபதி மகன் காா்த்திகேயன் (36). இவா் கரூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், இவா் புதிய இருசக்கர வாகனம் வாங்க ஈரோடு செல்வதாகவும், இரவு நண்பரின் வீட்டில் தங்கி மறுநாள் வாகனம் வாங்கப் போவதாகவும் கூறிச் சென்றுள்ளாா்.
இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் கரூரிலிருந்து ஈரோடு செல்லும் வழியில் மொடக்குறிச்சியை அடுத்த கேட்புதூா் ரயில்வே நுழைவுப் பாலம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்றபோது, நிலை தடுமாறி அருகே இருந்த மின்கம்பத்தில் மோதியதில் பலத்த காயமடைந்த காா்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து அங்கு சென்ற மொடக்குறிச்சி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து காா்த்திகேயன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.