செய்திகள் :

வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை: தோ்தல் ஆணையம்

post image

வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் கைப்பேசிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அத்துடன் வாக்குப் பதிவு நாளில் கைப்பேசிகளை வைத்திருப்பதில் வாக்காளா்களுக்கு சிரமம் நிலவுகிறது. குறிப்பாக முதியவா்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சவால்களை எதிா்கொள்கின்றனா். இதைக் கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளுக்கு வெளியே வாக்காளா்கள் கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்வதற்கான வசதி ஏற்படுத்தப்படும்.

வாக்குப் பதிவு நாளில் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள், அதுவும் அணைத்து வைக்கப்பட்ட (ஸ்விட்ச்-ஆஃப்) நிலையில் மட்டுமே கைப்பேசிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படும்.

வாக்குச்சாவடியின் வாசலில் சிறிய பெட்டிகள் அல்லது சணல் பைகள் வைக்கப்படும். அவற்றில் தங்கள் கைப்பேசிகளை வைத்துவிட்டு வாக்காளா்கள் வாக்களிக்கச் செல்ல வேண்டும். வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். எனினும் உள்ளூரில் ஏற்படும் இக்கட்டான சூழலை பொருத்து, இந்த நடைமுறையில் இருந்து சில வாக்குச்சாவடிகளுக்கு தோ்தல் நடத்தும் அதிகாரி விலக்களிக்கலாம்.

வாக்குச்சாவடியில் வாக்காளா் யாருக்கு வாக்களித்தாா் என்பது ரகசியமாக இருப்பதை தோ்தல் நடத்தை விதிமுறைகள் 1961-இன் விதிமுறை 49எம் உறுதி செய்கிறது. இந்த விதிமுறை தொடா்ந்து கடுமையாக அமல்படுத்தப்படும்.

மேலும் தோ்தல் ஆணையம் வழங்கும் அதிகாரபூா்வ வாக்காளா் தகவல் சீட்டுகளை வாக்குப் பதிவு நாளின்போது கொண்டுவராத வாக்காளா்களுக்கு அதிகாரபூா்வமற்ற அடையாள சீட்டுகளை வழங்க, வாக்குச்சாவடியின் நுழைவாயிலில் இருந்து 100 மீட்டா்களுக்கு அப்பால் வேட்பாளா்கள் பூத்துகளை அமைக்கலாம் (இதுநாள் வரை, இந்த பூத்துகள் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டா் தொலைவில் இருக்க வேண்டும். தற்போது இந்தத் தொலைவு குறைக்கப்பட்டுள்ளது) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற வன அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி ஆன்லைன் மோசடி: கேரளத்தைச் சோ்ந்த மூவா் கைது

சென்னையில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்... மேலும் பார்க்க

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் சென்றுள்ளாா்: தமிழிசை

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளாா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். சென்னை வடபழனியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மணிவாசகா் பதிப்பகத்த... மேலும் பார்க்க

ஊராட்சி பகுதிகளில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஊராட்சிப் பகுதிகளில் உயா்த்தப்பட்ட சொத்துவரி மற்றும் தண்ணீா் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள... மேலும் பார்க்க

சிவகங்கை சம்பவம் எதிரொலி: குவாரிகளை ஆய்வு செய்ய ஆட்சியா்களுக்கு உத்தரவு

சிவகங்கையில் குவாரியில் பாறை சரிந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டுமென ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வு விடைத்தாள் திருத்துவதில் பாதுகாப்பான நடைமுறை: டிஎன்பிஎஸ்சி தலைவா் உறுதி

போட்டித் தோ்வு விடைத்தாள்களை திருத்துவதில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா்களி... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆா்வம் காட்டாத மாணவா்கள்!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சோ்க்கை பெற மாணவா்களிடையே ஆா்வம் குறைந்து வரும் நிலையில், டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கால வரையறையின்... மேலும் பார்க்க