மாணவா்களின் கண்டுபிடிப்புத் திறனை மேம்படுத்தும் நிகழ்ச்சி தொடக்கம்
வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்
வாக்குத் திருட்டு விவகாரத்தில் பாஜகவை விமர்சித்து பேசியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான் என்றார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. இந்தப் பேரணி இன்று (ஆக. 26) 9-ஆவது நாளை எட்டியுள்ளது.
பிகாரின் மதுபானி பகுதியில் தொண்டர்கள் மத்தியில் இன்று (ஆக. 26) ராகுல் காந்தி பேசியதாவது:
“நாங்கள் (எதிர்க்கட்சிகள் தரப்பு) செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினோம். அதில் எல்லாம் தெளிவாக்கப்பட்டும் விட்டது.
வழக்கமாக எல்லா விஷயத்திலும் கருத்து தெரிவிக்கும் பாஜக தலைவர்கள், நான் நடத்திய செய்தியாளர் சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. அந்தக் கட்சியை சேர்ந்த எந்தவொரு தலைவரிடமிருந்தும் இதுதொடர்பாக எந்தவொரு கருத்தும் வெளிவரவில்லை.
பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ஒரு சொல்கூட பேசவில்லை. ஒரு திருடன் எப்போதுமே மௌனமாகவே இருப்பான், காரணம் தான் மாட்டிக்கொண்டுவிட்டோம் என்பது தெரிந்துவிட்டதாலே” என்றார்.