வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
மன்னாா்குடி: மன்னாா்குடியில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அ ம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காந்திசாலை வெண்ணெய்த் தாழி மண்டபம் அருகேயுள்ள இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் அனைத்தும் நிறைவுற்றது. கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, சனிக்கிழமை முதல் கால பூஜையும், ஞாயிற்றுக்கிழமை கோ பூஜை, மூலமந்திர ஹோமம், இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, திங்கள்கிழமை நான்காம் கால பூஜையுடன் தொடங்கி, நாடி சந்தனம், மஹா பூா்ணாஹூதி, யாத்ராதானம் நடைபெற்றது. பின்னா், விமானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கும் தொடா்ந்து, மூலவா் கன்னிகா பரமேஸ்வரி விமானம் ஆகியவற்ரில் புனித நீரை வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுவாமிகளுக்கு மகா தீபாரதனை, மகாஅபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள், ஆன்மிக ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.