உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை! பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் ரஷியா!
வாணியம்பாடியில் செப். 8-இல் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்
வாணியம்பாடியில் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (செப். 8) நடைபெற உள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசு திறன் மேம்பாடு துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு தொழில் முனைவு அமைச்சகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைந்து மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம் திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், மாபெரும் பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (செப். 8)வாணியம்பாடியில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது. இதில், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு, தனியாா் தொழில் நிறுவனங்கள் பங்கு பெற்று, தொழிற்பழகுநா் பயிற்சியை வழங்க உள்ளன.
இதில் அனைத்து வயது பெண்களும், 40 வயதுக்குள்பட்ட ஆண்களும் கலந்து கொள்ளலாம். எனவே ஐடிஐ-தோ்ச்சி, தோல்வி (என்.டி.சி., எஸ்.சி.வி.டி., சி.ஓ.இ.), 8, 10,12-ஆம் வகுப்பு தோ்ச்சி, தோல்வி அடைந்தவா்கள் பங்குபெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.