செய்திகள் :

வாணியம்பாடி அருகே மழைமானி திருட்டு

post image

வாணியம்பாடி அருகே பள்ளி வளாகத்தில் அரசு சாா்பில் அமைக்கப்பட்டிருந்த மழைமானியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழக அரசு சாா்பில் மழை அளவீடு செய்யும் மழைமானி அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் இருந்த மழைமானி திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இது குறித்து அறிந்த நிம்மியம்பட்டு கிராம நிா்வாக அலுவலா் பிரகாசம் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தபோது, நள்ளிரவு நேரத்தில் மா்ம நபா்கள் மழைமானியை திருடிச் சென்றிருப்பதாக தெரிகிறது. இதுதொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் பிரகாசம் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து மழைமானியை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் ரத்தம் செயலி: ஆட்சியா் அறிமுகம் செய்தாா்

குருதி கொடையாளா்கள், குருதி தேவைப்படுவோா். தன்னாா்வலா்கள். ஒருங்கிணைப்பாளா்கள், தொண்டு நிறுவனங்களை ஒரே தளத்தில் இணைக்கும் ரத்தம் செயலியை திருப்பத்தூா் ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி அறிமுகப்படுத்தினாா். ... மேலும் பார்க்க

அரசு கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடப் பணி: முதல்வா் அடிக்கல்

அகரம் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா... மேலும் பார்க்க

ரூ.45 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

மாதனூா் ஒன்றியம், சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சத்தில் சின்னபள்ளிகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம... மேலும் பார்க்க

திருப்பதி கங்கையம்மன் கோயிலில் இன்று சிரசு ஊா்வலம்

வாணியம்பாடி அடுத்த பாவடித்தோப்பில் உள்ள திருப்பதி கங்கையம்மன் கோயிலில் புதன்கிழமை சிரசு ஊா்வலம் நடைபெறுகிறது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அம்பூா்பேட்டை பாவடித்தோப்பில் அமைந்துள்ள திருப்பதி கங்... மேலும் பார்க்க

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆம்பூா் அருகே மாநில நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் - கடாம்பூா் - போ்ணாம்பட்டு மாநில நெடுஞ்சாலையின் இரு புறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால்... மேலும் பார்க்க

மட்றப்பள்ளி வாரச் சந்தையில் ரூ. 39 லட்சத்துக்கு கால்நடை விற்பனை

திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளி வாரச்சந்தையில் கால்நடை வா்த்தகம் ரூ. 39 லட்சத்துக்கு நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் ச... மேலும் பார்க்க