வாய்க்கால் தூா்வாரும் பணி ஆய்வு
தமிழக அரசின் நீா்வளத் துறை கொள்ளிடம் வடிநில கோட்டத்தில் பாசன வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணிக்காக 2025-026ஆம் ஆண்டுக்கு சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் 77 பணிககளுக்கு சுமாா் 14.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சேத்தியாத்தோப்பு அருகே பாழ்வாய்க்கால், கிளாங்காடு வாய்க்கால், முரட்டு வாய்க்கால், மஞ்சக்கொல்லை, பின்னலூா் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்க் தூா்வாரும் பணி நடைபெற்று வருவதை கடலூா் கண்காணிப்புப் பொறியாளா் மரியசூசை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினாா்.
ஆய்வின் போது கொள்ளிடம் வடி நில கோட்டம் செயற்பொறியாளா் காந்தரூபன், உதவி செயற்பொறியாளா்கள் விஜயகுமாா், கொளஞ்சி மற்றும் சரவணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.