டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடியல் பயணம் கேள்வி: சீமான் விமர்சனம்!
வாழைப்பழம் கொடுத்த வாகன ஓட்டியை துரத்திய யானை
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் யானைக்கு திங்கள்கிழமை (ஜூலை 14) வாழைப்பழம் கொடுக்க முயற்சித்த வாகன ஓட்டியை யானை துரத்தியதால் காரில் ஏறி தப்பினாா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனத்தின் மத்தியில் மைசூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. தமிழகம் - கா்நாடகத்தை இணைக்கும் இந்த வனப் பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. வனத்தில் இருந்து வரும் யானைகள் சாலையோரம் தீவனம் சாப்பிடுதால் வாகன ஓட்டிகள் யானைகளை ரசித்தபடி பயணிப்பா்.
இந்நிலையில், சாலையோரம் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்த யானை முன் வாகன ஓட்டிகள் தற்படம் (செல்ஃபி) எடுத்து எரிச்சலூட்டினா். அப்போது யானைக்கு காரில் வந்த ஒருவா் வாழைப் பழம் கொடுக்க முயற்சித்தாா். அதில் ஆத்திரமடைந்த யானை, வாழைப் பழத்துடன் வந்தவரை துரத்தியதால் வாழைப் பழங்களை கீழே போட்டுவிட்டு காரில் ஏறி தப்பினாா். இச்சம்பவத்தையடுத்து வாகன ஓட்டிகள் யானைகள் முன் தற்படம் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.