18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
விகடன் இணையதள முடக்கம்: ``மொத்த கலை வெளிப்பாட்டுக்கும் அச்சுறுத்தல்!'' -ஓவியர் ராமமூர்த்தி கண்டனம்
விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் அடிப்படையில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது.
இந்த முடக்க நடவடிக்கை கருத்துச் சுந்ததிரத்துக்கு எதிரானது என அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைத்துறையினர் என பலதரப்பினரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு ஓவியர் ராமமூர்த்தி, ``பாரம்பரியம் கொண்ட விகடன் ஊடகத்தின் இணையதளத்தை ஒன்றிய அமைச்சர், பாஜகவின் வேண்டுகோளுக்காக முடக்குதல் என்பது அந்த ஊடகம் மட்டும் தொடர்புடைய சிக்கலாக நிற்கவில்லை. இதன் மூலம் ஒட்டுமொத்த கலை வெளிப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் எழுந்திருக்கிறது. அரசியலில் விமர்சனம் வைப்பதும், ஓவியம், சித்திரம் என மாறுபட்ட வடிவங்களில் அதை சொல்வதும் ஜனநாயகத்தின் பண்பு ஆகும். எந்த ஒரு அரசையும் எதிர்நிலையில் இருந்து விமர்சிப்பது மட்டும்தான் ஊடக அறம் என்று பார்க்கிறேன். எனவே அந்த அறத்தை முடக்குவது, அரசின் அச்சத்தைக் குறிக்கிறது.

எழுத்தை விடவும் சித்திரங்களுக்கு கூடுதலான சுதந்திரத்தை எல்லா காலத்திலும் சமூகம் கொடுத்து வந்துள்ளது. அதை மக்கள், விகடன் போன்ற பெரும் ஊடகம் வழியே தொடர்ந்து கவனித்து ஏற்றுக்கொள்கிறார்கள். மக்கள் மேல் உண்மையான அக்கறையும், அரசியல் சட்டத்தின் மீது மதிப்பும் இருக்குமானால் அரசாங்கம் தன் தவறை உணர்ந்து முடக்கத்தை திரும்ப பெறவேண்டும்." என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs