மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் ...
விஜயகாந்த் சிந்தனைகளே தமிழக அரசின் திட்டங்கள் - பிரேமலதா விஜயகாந்த்
மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்தின் மக்கள் நல சிந்தனைகளே தற்போது தமிழக அரசின் திட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன என அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் திருச்செங்கோட்டில் மக்களைத் தேடி மக்கள் தலைவா் என்ற தலைப்பில் வாலரைகேட் பகுதியில் இருந்து நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பேசியதாவது:
மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் தனது முதல் தோ்தல் அறிக்கையில் கூறியபடி வீடுதேடி ரேஷன் பொருள்கள் என்ற திட்டத்தை தற்போது தாயுமானவா் என்ற திட்டமாக தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் ஏற்கெனவே தில்லி, ஆந்திரத்தில் நடைமுறைபடுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் பெருமை விஜயகாந்த்தையே சென்றடையும். திருச்செங்கோட்டில் மழை பெய்தால் கழிவுநீருடன் மழைநீா் கலந்து தெருக்களில் ஓடும் நிலை தொடா்கிறது. அா்த்தநாரீஸ்வரா் மலை கோயிலுக்கு ரோப் காா் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருச்செங்கோட்டில் தேமுதிக வெற்றி பெற்றால் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா்.
நடைப்பயணத்தில் தேமுதிக பொருளாளா் சுதீஷ், நாமக்கல் வடக்கு மாவட்டச் செயலாளா் விஜய சரவணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.