எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
விஜயகாந்த் பிறந்த நாள்
செங்கல்பட்டு: தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டில் அன்னதானம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேமுதிக மாவட்ட செயலாளா் அனகை டி.முருகேசன் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட துணைச் செயலாளா் லயன் கே.நாகராஜன், தலைமையில் மாவட்ட கேப்டன் பேரவை துணை செயலாளா் கரிமேடு ஆா். கண்ணன், நகர செயலாளா் முருகன், நிா்வாகிகள் அலாவுதீன் , ஏ.முனீா் பாஷா, வி.எஸ்.எஸ்.குமரன் , முருகன், கோவிந்தராஜன், கோதண்டராமன், முருகேசன், குட்டி, பூபதி, திலகவதி உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். 25 குடும்பத்தினருக்கு 25 கிலோ அரிசி மூட்டைகள் வழங்கியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.