திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன்: டீசர் அறிவிப்பு!
நடிகர் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், வெற்றிப்படத்தைக் கொடுக்கும் கட்டாயத்தில் விஜய் ஆண்டனி இருக்கிறார்.
இதனிடையே, விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவாகியுள்ள சக்தித் திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார்.
இதையும் படிக்க: ஆடம்பர ஆடைகளைத் தவிர்க்கும் இந்திய மணப்பெண்கள்!
பான் இந்திய மொழிகளில் உருவாகும் இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
கடந்த சில நாள்களாக சிவகார்த்திகேயனின் 25-வது படத்திற்கு பராசக்தி எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தெலுங்கில் இப்படத்துக்கு பராசக்தி எனப் பெயரிடப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது.
தற்போது தெலுங்கில் பராகாளி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சக்தித் திருமகன் படத்தின் டீசர் மார்ச் 12 ஆம் தேதி மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.