செய்திகள் :

விஜய் வெளியிட்ட ஆப் முதல் தமிழக பாஜக-வில் நிர்வாகிகள் மாற்றம் வரை - Daily Roundup 30.07.2025

post image

* ரஷ்யாவில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் சுனாமி எச்சரிக்கை விடுத்தன. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கையை தளர்த்தியிருந்தாலும் சிலே உள்ளிட்ட தென்னமெரிக்க நாடுகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு 25% வரி விதித்து உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள், எண்ணெய் வாங்குவதனால் கூடுதல் அபராதமும் விதிக்கப்படும் எனக் கூறியுள்ளார். ஆகஸ்ட் 1 முதல் இவை அமலுக்கு வரும்.

குஷ்பு

* தமிழக பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குஷ்புவுக்கு துணைத் தலைவர் பதவியும், கே.டி ராகவனுக்கு மாநில இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. விஜயதாரணி, சரத்குமார், அண்ணாமலைக்கு தேசிய அளவிலான பதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* "1999ம் ஆண்டு சுப்பிரமணிய சுவாமி பேச்சைக் கேட்டு பாஜக அரசை கவிழ்த்து தவறு செய்துவிட்டோம்" எனக் கடம்பூர் ராஜு பேசியிருப்பதற்கு, "ஜெயலலிதாவின் முடிவைத் தவறு எனக் கூறுவதா..." என்று சர்சையை ஏற்பட்டுள்ளது.

* இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில்தான் பும்ராவை களமிறக்குவோம் என இந்திய அணி கூறியிருந்தது. நான்காவது டெஸ்டுடன் பும்ரா அதை நிறைவு செய்துள்ளார். அதனால் இன்று (31 ஜூலை) தொடங்கும் போட்டியில் பும்ரா விளையாட மாட்டாரா என்ற கேள்விக்கு, "பிட்சைப் பொறுத்து முடிவு செய்வோம்" என பதிலளித்துள்ளார் கேப்டன் கில்.

கில்
கில்

* தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான My TVK என்ற செயலியை வெளியிட்டார் விஜய். விழாவில், "இதுக்கு முன்னாடி தமிழக அரசியலில் நடந்த இரண்டு பெரிய தேர்தல்களான 1967, 1977 போல 2026 தேர்தலும் அமையப் போகிறது. அதை உறுதியாக நம்புகிறோம்." எனப் பேசியிருக்கிறார்.

* திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு ஊராட்சி சேர்ந்த புலிக்குத்தி காடு கிராமம் அருகே ஒரு தனியார் தோட்டத்தில்  3  பளியர் பழங்குடி குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டு தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு போன்ற எந்த அடையாளமும் இல்லை எனக் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

* சிவகங்கையில் 'மக்களை சந்திப்போம், தமிழகத்தைக் காப்போம்' என்ற பரப்புரையை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, "வேலியே பயிரை மேய்வது போல அஜித்குமார் வழக்கில் காவலர்கள் குற்றம் செய்துள்ளனர். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகம் உள்ளது தமிழகத்தில் தான்." எனக் கூறியதுடன் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

* பஹல்காம் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் பாஜக அரசுக்கு எதிராக முக்கிய கேள்விகளை முன்வைத்த சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் ராஜ்ய சபா எம்.பி கமல்ஹாசன்.

* குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் "கமலை எனக்குப் பிடிக்கும். அதை அவரிடம் தெரிவிக்க முயன்றபோது அவர் தங்கை என்று சொல்லிவிட்டார்," என லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் பேசியது வைரலான நிலையில், "45 வயதில் ஒரு பிரபல நடிகரை நேரில் சந்தித்தபோது, உண்மையிலேயே 'star-struck' ஆகிவிட்டேன். அவர் என்னைப் பார்த்து, 'என் சகோதரி மாதிரி இருக்கிறீர்கள்' என்று சொன்னதும், என் நண்பர்கள் நகைச்சுவையாகக் கலாய்த்தார்கள்." என விளக்கமளித்துள்ளார்.

ஜே.பி நட்டா

* நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே பிரதமர் மோடியை கண்டித்துப் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு மறுப்பு தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா "மன சமநிலையை இழக்கிறார்" என விமர்சித்ததுடன் கடுமையான வார்த்தைகளை உபயோகித்தார். எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்துக்குப் பிறகு தான் பேசியவற்றைத் திரும்பப் பெற்றுக்கொண்டவர், அதற்காக மன்னிப்பும் கேட்டார்.

* திருநெல்வேலியில் மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கு தொடர்பாக கொலையாளி சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

* நடிகை ராதிகா சரத்குமார் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

* இந்தியா - அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பான நிசார் செயற்கைகோள் திட்டம் வெற்றிபெற்றுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகம்!

'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 முக்கிய செய்திகள்!

சௌதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விழுந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.கேரளா பள்ளிகளில் ஒரு மாத விடுமுறையை வெயில் காலத்துக்கு பதில் மழைக் காலத்தில் அளிப்பது குறித்து மக்களிடம் கருத்த... மேலும் பார்க்க

"ஓ.பி.எஸ், முதல்வரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்திருப்பார்" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை விளாங்குடியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். "அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் வெளியேறிவிட்டாரே" என்ற கேள்விக்கு,"அவர் அதிமுக கூட்... மேலும் பார்க்க

"இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது" - ட்ரம்ப் கருத்தை ஏற்ற ராகுல் காந்தி; முரண்பட்டாரா சசி தரூர்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை "இறந்த பொருளாதரம்" என விமர்சித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் ரா... மேலும் பார்க்க

Trump: பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்கா; பாக்-இல் எண்ணெய் வளமா? ட்ரம்ப் கூறுவது உண்மையா?

'பாகிஸ்தானுடன் இப்போது தான் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். அதன் படி, பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவ உள்ளது.இரு நாடுகளின் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஒரு எண... மேலும் பார்க்க

ட்ரம்ப் - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் நெருக்கம்; குறைந்த வரி விகிதம்! - இதற்கான 4 காரணங்கள் என்ன?

இந்தியாவுக்கு 25 சதவிகித வரிப் போட்டு தள்ளியிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு 19 சதவிகித வரியைத் தான் போட்டுள்ளார். மேலும், ட்ரம்பிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள நட்பு வலுத்து வரு... மேலும் பார்க்க

"கவின் தாயார் கண்ணீருக்கு பதில் இருக்கிறதா? திமுக ஆட்சிக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகியும்..." - சீமான்

திருநெல்வேலியில் ஜூலை 27-ம் தேதி கவின் என்பவர் சுர்ஜித் என்பவரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.இதில், கொலையாளி சுர்ஜித் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் தாய் தந்தையான காவல்துறை அதிகாரிகள் சரவணன்,... மேலும் பார்க்க