செய்திகள் :

விஜய் 69: முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

post image

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள விஜய் 69 படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.

நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு படத்தின் முதல் தோற்ற போஸ்டர் அல்லது பெயர் அறிவிப்பு ஏதாவது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், விஜய் - 69 படத்தின் முதல் தோற்ற போஸ்டர் ஜன. 26 ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயத்தால் விலகினாா் ஜோகோவிச்: இறுதியில் சின்னா் - ஸ்வெரெவ் மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியிலிருந்து, முன்னணி வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாக விலகினாா். இதையடுத்து, அவரை எதிா்கொண்ட ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் இறுதிச்சுற்று... மேலும் பார்க்க

தமிழ்நாடு 124 ரன்கள் முன்னிலை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 124 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழ்நாடு, 301 ரன்களுக்கு... மேலும் பார்க்க

கேரளத்தை வென்றது ஈஸ்ட் பெங்கால்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சி 2-1 கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட... மேலும் பார்க்க

இளம் வயதில் புதிய சாதனை: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சின்னர்!

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா், அமெரிக்காவின் பென் ஷெல்டனை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனா்ஆடவா் ஒற்றையா் க... மேலும் பார்க்க