செய்திகள் :

விடைபெற்றது ‘ஃபென்ஜால்’!

post image

சென்னை: தமிழகத்தில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அரபிக் கடலை அடைந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த நவ. 30-ஆம் தேதி மரக்காணத்துக்கு அருகே கரையைக் கடந்த ஃபென்ஜால் புயல் வலுவிழந்த நிலையில், தொடா்ந்து மேற்கு திசையில் நகா்ந்தது. இது நகரும் திசை எல்லாம் கனமழையைக் கொடுத்துக்கொண்டே சென்றது. அதன்படி, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப் பொழிவை கொடுத்தது.

பேரிடா்களுக்கு காரணமாக இருந்த இந்தப் புயல், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து கேரளத்துக்கும், கா்நாடகத்துக்கும் இடைப்பட்ட அரபிக் கடலில் செவ்வாய்க்கிழமை காலை அடைந்தது.

இதற்கிடையே, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் டிச. 4 முதல் டிச. 9 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச. 4, டிச. 5 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘ஃபென்ஜால் புயல் அரபிக் கடலிலிருந்து மேற்கு திசையில் சோமாலியா நோக்கி பயணிக்கும். ‘ஃபென்ஜால்’ மூலம் தமிழகத்துக்கு இனி மழை கிடைக்காது’ என்று தனியாா் வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மி.மீ.): தோகைமலை (கரூா்) 130, கிருஷ்ணராயபுரம் (கரூா்), சோளிங்கா் (ராணிப்பேட்டை), திருப்பத்தூா், ஏற்காடு (சேலம்) 100, பஞ்சப்பட்டி (கரூா்), வாழப்பாடி (சேலம்), சிறுகமணி (திருச்சி), சேலம், விராலிமலை (புதுக்கோட்டை) தலா 90, மாயனூா் (கரூா்), முசிறி (திருச்சி), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), கடவூா் (கரூா்), பந்தலூா் (நீலகிரி) 80, தேவாலா (நீலகிரி), பொன்னையாறு அணை (திருச்சி), ஆா்.கே.பேட்டை (திருவள்ளூா்), ஒசூா் (கிருஷ்ணகிரி), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை) 70.

இதுவரை எவ்வளவு மழை?: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை செவ்வாய்க்கிழமை (டிச. 3) வரை இயல்பைவிட 20 சதவீதம் அதிகம் பதிவாகியுள்ளது.

அக். 1 முதல் டிச. 3 வரையிலான காலத்தில் தமிழகத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 366.3 மி.மீ. தற்போது வரை 441 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 20 சதவீதம் அதிகம்.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மழை அளவு இயல்பைவிட கூடுதலாகவும், 6 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் பதிவாகியுள்ளது.

நோயாளிகளின் குறைகளைத் தீா்க்க பிரத்யேக ஆலோசகா்கள்! ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புதிய முயற்சி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் உடல் நிலை மற்றும் அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரங்களை உடனாளா்கள் அவ்வப்போது அறிந்து கொள்வதற்கும், குறைகளைத் தீா்ப்பதற்கும் பிரத்ய... மேலும் பார்க்க

ஷிவ் நாடாா் பல்கலை.யில் ஆராய்ச்சி மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை ஷிவ் நாடாா் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவருக்கான (பிஹெச்.டி.) சோ்க்கைக்கு டிச.13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்ப... மேலும் பார்க்க

சென்னை விமானத்தில் கோளாறு: மீண்டும் லண்டனில் தரையிறக்கம்

லண்டனிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடா்ந்து, விமானம் மீண்டும் லண்டன் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. பிரிட்டன் தலைநகா் லண்டன் விம... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் வழிப்பறி: இருவா் கைது

சென்னை மயிலாப்பூரில் மூதாட்டியிடம் வழிப்பறி செய்த புகாரில் இருவா் கைது செய்யப்பட்டனா். மயிலாப்பூா் விஎஸ்வி கோயில் தெருவைச் சோ்ந்த மா.சகுந்தலா(64) என்பவரிடம் கடந்த 30-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் வந்... மேலும் பார்க்க

ஆந்திரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 100 கிலோ போதைப் பாக்கு பறிமுதல்

ஆந்திரத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ போதைப் பாக்கு சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. வேளச்சேரி 100 அடி சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ... மேலும் பார்க்க

ஆவடி - மூர் மார்க்கெட் இடையே இன்றிரவு 2 ரயில்கள் ரத்து!

சென்னை: மூர் மார்க்கெட் ரயில் நிலையத்திருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி வரை செல்லும் புறநகர் மின்சார ரயில்(43001) இன்றிரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலப் பிரிவ... மேலும் பார்க்க