காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு
`விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான்' - 5 முறை எம்.பி அனுராக் தாக்கூர் பேச்சு
விண்வெளிக்கு முதலில் யார் சென்றது என்பது குறித்து பாஜக எம்.பி அனுராக் தாகூர் பேசியிருப்பது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இமாசல பிரதேசத்தில் உள்ள பி.எம் ஶ்ரீ பள்ளி ஒன்றில் உரையாற்றியுள்ளார் இவர்.
அப்போது அவர் மாணவர்களிடம், 'விண்வெளிக்கு முதலில் சென்றது யார்?' என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார். அதற்கு மாணவர்கள், 'நீல் ஆம்ஸ்ட்ராங்' என்று பதிலளித்துள்ளனர்.

அனுமன் தான்!
அதற்கு அனுராக் தாகூர், "விண்வெளிக்கு முதன் முதலில் சென்றது அனுமன் ஜி தான் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
பிரிட்டிஷ்காரர்கள் நமக்கு என்ன கற்பித்தார்களோ, அதே கண்ணோட்டத்தில் தான் நாம் இன்னும் நம்மை பார்த்துகொண்டிருக்கிறோம்.
நம்முடைய ஆயிரம் ஆண்டு பழமையான பாரம்பரியம், அறிவு, கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கும் வரை, ஒன்று மாறப்போவதில்லை.
அதனால், நான் பள்ளித் தாளாளர் உள்ளிட்ட அனைவரும் பாடப்புத்தகத்தைத் தாண்டி, நமது தேசிய பாரம்பரியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதை செய்தால், நம் தேசத்தைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்" என்று பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஐந்து முறை எம்.பியாக இருக்கும் ஒருவர், இப்படி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.