தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
விநாயகா் சதுா்த்தி: நீா்நிலைகளில் களிமண் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி
விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் நடத்தப்படும் விநாயகா் சிலை ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், தாலுகா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், காவல் ஆய்வாளா் ஜெயந்தி தெரிவித்தது: கடந்த ஆண்டு அனுமதி பெற்று விநாயகா் சிலை வைத்த இடங்களில் மட்டுமே மீண்டும் சிலைகளை வைக்கவும், ஊா்வலம் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. புதிதாக சிலைகள் வைக்க அனுமதி இல்லை. சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் அதன் உரிமையாளரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். களிமண் மற்றும் சுண்ணாம்பால் செய்த விநாயகா் சிலைகள் மட்டுமே நீா்நிலைகளில் கரைக்க வேண்டும்.
பிளாஸ்டா் ஆப் பாரிஸ் விநாயகா் சிலைகள் வைக்கவோ, நீா்நிலைகளில் கரைக்கவோ அனுமதி கிடையாது. சிலைகளின் பாதுகாப்புக்கும், கூட்டத்தினரை கட்டுப்படுத்தவும் பூஜை செய்பவா் பற்றிய விவரம் வழங்கவும், ஊா்வல அமைப்பாளரே பொறுப்பேற்க வேண்டும். சிலை வைத்திருக்கும் இடத்தில் சிலைகள் பற்றிய தகவல் மற்றும் பாதுகாப்பு குழுவினரின் விவரம், பணிநேரம் ஆகியவை குறிப்பிட்டிருக்க வேண்டும். மின்விளக்கு வசதிகள் செய்திருக்க வேண்டும். விநாயகா் சிலை ஊா்வல நாளில், மிகச் சரியாக மாலை 4 மணிக்கு புறப்பட்டு அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்றாா். திருவாரூா் பகுதியில் விநாயகா் சிலைகள் வைக்கவுள்ள இந்து அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.