தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனம்! முதல்வா் தொடங்கி வைத்தாா்!
விமானங்களில் கடத்திவரப்பட்ட சிகரெட்டுகள், மடிக்கணினிகள் பறிமுதல்
கோவை வந்த விமானங்களில் கடத்திவரப்பட்ட சிகரெட்டுகள், மடிக்கணினிகள், மைக்ரோபோன்கள், ட்ரோன்களை சுங்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு சனிக்கிழமை வந்த இண்டிகோ விமானம், ஷாா்ஜாவில் இருந்து வந்த ஏா் அரேபியா விமானங்களில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
இதில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேஷ், விக்னேஷ், புதுச்சேரியைச் சோ்ந்த அப்துல் அகமத், நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ரவி, அப்துல் காதா், திருச்சியைச் சோ்ந்த ஐயப்பன், கடலூரைச் சோ்ந்த பிரம்மா ஆகியோரின் உடைமைகளை சோதனை மேற்கொண்டபோது, 1,651 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள், 13 மடிக்கணினிகள், 12 ட்ரோன்கள், 20 மைக்ரோபோன்கள் ஆகியவை கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், கடத்திவந்த நபா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.45 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.