செய்திகள் :

விமான விபத்து: பிரிட்டன் வந்த இரு உடல்கள் மாறிவிட்டன! உறவினர்கள் புகார்!

post image

ஏர் இந்தியா விபத்தில் பலியான பிரிட்டனைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினர் தங்களுக்கு கிடைத்த உடலுடன் டிஎன்ஏ பரிசோதனை பொருந்தவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்த நிலையில், ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார்.

விமானத்தில் 12 ஊழியர்கள், பயணிகளில் இந்தியாவைச் சேர்ந்த 169 பேர், 53 பிரிட்டன் நாட்டினர், 7 போர்த்துகீசிய நாட்டினர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவர் பயணித்திருந்தனர்.

இதில், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர்பிழைத்த நிலையில், மற்ற 241 பேரின் உடலும் அடையாளம் தெரியாத வகையில் எரிந்தது.

இதனால், அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அனைத்து உடல்களின் மாதிரிகளும் எடுக்கப்பட்டு, அவர்களின் உறவினர்களின் மாதிரிகளுடன் ஒப்பிட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, அனைத்து உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட நிலையில், இரண்டு பேரின் உடல்கள் மாறி வந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்திருப்பதாவது:

”இந்தியாவில் இருந்து 24 முதல் 26 உடல்கள் வந்தன. இதையடுத்து, பிரிட்டனில் மீண்டும் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இரண்டு சடலங்கள் மட்டும் உறவினர்களின் மாதிரிகளுடன் பொருந்தவில்லை. அவர்கள் குடும்பத்தினரின் சடலத்துக்கு பதிலாக வேறு சடலம் அனுப்பப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக செய்தியை வெளியிடவில்லை.

The families of two British victims of the Air India crash have said that DNA tests found by them contradict the bodies they found.

இதையும் படிக்க : குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பணிகள் தொடக்கம்!

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் ஷெபாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து பிரிட்டன் த... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா ஆஜராகவில்லை

சட்டவிரோத இணையவழி சூதாட்ட வழக்கு தொடா்பான அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா டகுபதி புதன்கிழமை ஆஜராகவில்லை. சட்டவிரோதமாக இணையத்தில் பந்தயம் கட்டி விளையாடுவதற்கான பல சூதாட்ட செயலிகள், முறைகேடான வழி... மேலும் பார்க்க

தில்லி அருகே ‘போலி தூதரகம்’ நடத்திய நபா் கைது

தேசிய தலைநகா் வலயமான காஜியாபாதில் இல்லாத நாடுகளின் பெயரில் போலியாக தூதரகம் நடத்தி வந்த ஹா்ஷ் வா்தன் ஜெயின் என்ற நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். இது குறித்து உத்தர பிர... மேலும் பார்க்க

‘இந்தியாவில் குறைந்துவரும் நுகா்வு சமத்துவமின்மை’

இந்தியாவில் நுகா்வு சமத்துவமின்மை குறைந்து வருவதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைமைப் பொருளாதார ஆலோசகா் சௌமியா காந்தி கோஷ், எஸ்பிஐ பொருளாதார நிபுணா் ஃபல்குனி சின்ஹா ஆகியோா் தெரிவித்துள்ளனா். இது தொடா்... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

நமது நிருபர்கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினருமான கனிமொழி மக்களவையில் புதன்கிழமை வலியுறுத்தினார். இது தொடர்... மேலும் பார்க்க

பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகம் இடம்பெறுமா? மத்திய அரசு விளக்கம்

நமது சிறப்பு நிருபர்பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகத்தை சேர்ப்பதில் ஆட்சேபனை இருந்தால் அது குறித்து தமிழக அரசிடம் முறைப்படி தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங... மேலும் பார்க்க