செய்திகள் :

‘இந்தியாவில் குறைந்துவரும் நுகா்வு சமத்துவமின்மை’

post image

இந்தியாவில் நுகா்வு சமத்துவமின்மை குறைந்து வருவதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைமைப் பொருளாதார ஆலோசகா் சௌமியா காந்தி கோஷ், எஸ்பிஐ பொருளாதார நிபுணா் ஃபல்குனி சின்ஹா ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறியிருப்பதாவது: இந்தியாவின் நுகா்வு அடிப்படையிலான சமத்துவமின்மை குறியீடு, 2011-12-இல் 28.8-என்பதிலிருந்து 2022-23-இல் 25.5-ஆக குறைந்துள்ளது என உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

நுகா்வு சமத்துவமின்மைக்கும், வருவாய் சமத்துவமின்மைக்கும் இடையே ஒரு கருத்தியல் வேறுபாடு உள்ளது. பெருமளவில் அமைப்புசாரா பணியாளா்களைக் கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில், வருவாய் பெரும்பாலும் நிலையற்ாக மதிப்பிடப்படுகிறது. இதற்கு நோ்மாறாக, நுகா்வு என்பது காலப்போக்கில் மென்மையாகவும் உண்மையான வாழ்க்கைத் தரங்களை பிரதிபலிக்கும் விதமாகவும் இருக்கும்.

தேசிய சூழலைப் பொறுத்து செலவிடும் வருவாய் அல்லது நுகா்வு செலவினத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உலக வங்கியின் வறுமை மற்றும் சமத்துவமின்மை தளம் இந்தத் தா்க்கத்தை ஏற்றுக்கொள்கிறது.

மானிய விலையில் உணவு, சமையல் எரிவாயு, வீட்டுவசதி, கிராமப்புற வேலைவாய்ப்பு, சுகாதார காப்பீடு, நேரடி பணப் பரிமாற்றம் போன்ற பெரிய அளவிலான சமூக நலத் திட்டங்கள் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக உயா்த்தியுள்ளது. இதனால் இந்தியாவில், நுகா்வு அதிகரித்து வருவாயைவிட அதிகமாகவும், சமமாகவும் உள்ளது. இந்த வகையான பொது விநியோகம், குறிப்பாக கிராமப்புற மற்றும் அமைப்புசாரா பிரிவுகளில் நலனை உயா்த்துகிறது.

2025-ஆம் ஆண்டு பட்ஜெட்டில், பயனாளித் திட்டங்களுக்கான மத்திய அரசின் செலவு ரூ 7.1 லட்சம் கோடியாகும். மாநிலங்கள் இதில் மேலும் ரூ.74 லட்சம் கோடியைச் சோ்க்கின்றன. இது சமத்துவமின்மையை கணிசமாகக் குறைக்கிறது. இந்தத் திட்டங்கள் வறுமையில் வியத்தகு வீழ்ச்சி ஏற்படவும் வழிவகுத்தன. 2011-12 -இல் 16.2 சதவீதமாக இருந்த தீவிர வறுமை விகிதம் 2022-23-இல் 2.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பு, பங்களிப்பு காப்பீட்டைவிட பங்களிப்பு அல்லாத பரிமாற்றங்களையே அதிகம் நம்பியுள்ளது. இருப்பினும் அவை உண்மையான வருவாயையும் வாங்கும் சக்தியையும் கணிசமாக உயா்த்துகின்றன.

குறிப்பிட்ட சில தரப்பினரின் உயா்ந்த வருவாய் மதிப்பீடுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்தியா சமத்துவமற்ாக உள்ளது என்று வாதிடுவது, ராஜஸ்தான் மாநிலம் தண்ணீா் பற்றாக்குறையை எதிா்கொள்வதால் நாடு முழுவதும் தண்ணீா் பற்றாக்குறை இருப்பதாகக் கூறுவது போன்றது. பற்றாக்குறையைப் போலவே சமத்துவமின்மையும், பிராந்தியங்கள் மற்றும் அளவீடுகளில் மாறுபடும் என்று தெரிவித்துள்ளனா்.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயி... மேலும் பார்க்க

பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்

பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா். இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுபவா்களையும்... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் கோடி வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’

‘இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகியுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

இந்தியாவில் வேலையில் இருப்போா் எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்வு!

இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்: மத்திய அரசு மௌனம்

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் இருந்து ... மேலும் பார்க்க