உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகம் இடம்பெறுமா? மத்திய அரசு விளக்கம்
நமது சிறப்பு நிருபர்
பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகத்தை சேர்ப்பதில் ஆட்சேபனை இருந்தால் அது குறித்து தமிழக அரசிடம் முறைப்படி தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக குழுத்தலைவர் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை இணை அமைச்சர் துர்காதாஸ் உய்கே அளித்துள்ள பதிலில், "வால்மீகி சமூகத்தை பட்டியலினத்தில் சேர்க்க தமிழக அரசிடமிருந்து வந்த முன்மொழிவை இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் தேசிய பழங்குடியினர் ஆணையம் பரிசீலித்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
அதில் ஏதேனும் ஆட்பேசனை இருந்தால் தமிழக அரசுக்குத் முறைப்படி தெரிவிக்கப்பட்டு உரிய திருத்தங்களை நிவர்த்தி செய்து அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு திறன் மேம்பாடு மற்றும் வருவாயைப் பெருக்க பிரதமரின் அனுசுசித் ஜாதி அபியுதய் திட்டம் மூலம் வேலைûவாய்ப்பு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக திமுக உறுப்பினர் எம்.எம். அப்துல்லா கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்துள்ள பதிலில், "கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலைவாய்ப்பை பெருக்குவதற்காகரூ. 124.12 கோடி அனுமதிக்கப்பட்டு 24,806 பேர் பயனடைந்துள்ளனர்' என்று கூறியுள்ளார். மேலும், இந்த திட்டங்களுக்காக தமிழகத்துக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.602.68 கோடி ஒதுக்கப்பட்டதில் தமிழக அரசு ரூ. 518.56 கோடியைப் பயன்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.