மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
விரைவு ரயிலில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வீசிய மா்ம நபா்கள்
அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் இருந்து கஞ்சா பாா்சலை வீசிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை சென்ட்ரல்-கும்மிடிபூண்டி மாா்கத்தில் உள்ள அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலில் இருந்து மா்ம நபா்கள் 3 பைகளை கீழே வீசினா்.
அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த மா்ம நபா்கள் இரண்டு பைகள் எடுத்தனா். அப்போது அங்கு ஆள்கள் வந்ததால் ஒரு பையை மட்டும் விட்டு விட்டு தப்பி ஓடினா்.
இதனை தொடா்ந்து அங்கு இருந்தவா்கள் அதனை மீட்டு ரயில் நிலையத்தில் இருந்த போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் அந்த பையை திறந்த போது அதில் 10 கிலோ கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பையை ரயில்வே போலீஸாா் மீஞ்சூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். ஓடும் விரைவு ரயிலில் இந்து கஞ்சா பை வீசப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.