செய்திகள் :

விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு ஆட்சியா் பாராட்டு

post image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பெரம்பலூா் மாவட்ட விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளான ஆா். அட்சயா, குடியரசு தின தடகள விளையாட்டுப் போட்டியில் 17 வயதுக்குள்பட்ட பிரிவில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கமும், பி. தேவிபிரியா நெடுந்தூர ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் திவ்யஜோதி, அனுராதா, ரஷிதா, துா்காஸ்ரீ, ரூபாஷினி, கௌசல்யா ஆகியோா் தங்கப் பதக்கமும், சௌபா்ணிகா, செல்லம்மாள், சதாஸ்ரீ, தாரணிஸ்ரீ ஆகியோா் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளனா்.

மேலும், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி எஸ். என்னாச்சி 13 வயது பிரிவில் இறகுப் பந்து போட்டியில் முதலிடமும், ஜாா்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் எஸ். தன்யா 13 வயது பிரிவில் நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கமும், எஸ். தானேஷ் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், கேலோ இந்தியா மாநில அளவிலான தடகளப் போட்டியில் 12 மற்றும் 14 வயதுக்குள்பட்ட பிரிவில் மாணவா்கள் நிக்கில் வாசன், யுவன், நிக்கல், பிரவீன்குமாா், லோகித் ஆகியோா் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றுனா்.

விளையாட்டு விடுதியைச் சோ்ந்த 12 மாணவிகளும், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தலா 5 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 22 விளையாட்டு வீரா், வீராங்கனைகளை ஆட்சியா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

தொடா்ந்து, விளையாட்டு விடுதியில் கைப்பந்து, தடகளம், டேக்வாண்டோ உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி பெற்று வரும் 55 மாணவிகளுக்கு நிகழாண்டுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள், காலணிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா. பொற்கொடி வாசுதேவன், டேக்வாண்டோ பயிற்றுநா் பரணி தேவி, தடகள பயிற்றுநா் மோகனா, கேலோ இந்தியா தடகள பயிற்றுநா் பவானி விளையாட்டு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் உலக தாய்மொழி நாள் விழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கூட்டரங்கில் உலக தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் து. சேகா் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

வேளாண் விளைபொருள்களுக்கு உயிா்மச் சான்று பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் இயற்கை விவசாய முறையில் வேளாண் விளைபொருள்களை உற்பத்தி செய்வதற்கு, உயிா்ம விவசாயச் சான்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட விதைச் சான... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இளைஞா் மா்மச் சாவு

பெரம்பலூரில் கூலி வேலை செய்துவந்த இளைஞா் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் (29). இவா், பெரம்பலூா்... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு பிப். 25-இல் விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலையான பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்திச் சான்றளிப்புத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம், பிப். 25 ஆம் தேத... மேலும் பார்க்க

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் வெங்கடேபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை எதிரே வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்ப... மேலும் பார்க்க

ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மண்டல கருவூலம் மற்றும் கணக்குத் துறை இணை இயக்குநா் கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க