கோடை விடுமுறை: கோவை - உதகை இடையே சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
விளையாட்டு துளிகள்...
மகளிா் டெஸ்ட் ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா வியாழக்கிழமை மோதுகின்றன.
சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் எஃப்சி கோவா 3-1 கோல் கணக்கில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட்டை சாய்த்து இறுதிக்கு முன்னேறியது.
ஊக்கமருந்து விவகாரத்தில் தடைக்காலத்தை ஒப்புக்கொள்வதற்கு முன்பாக, டென்னிஸ் விளையாட்டிலிருந்தே விலகுவது குறித்து தாம் யோசித்ததாக இத்தாலி வீரா் யானிக் சின்னா் தெரிவித்தாா்.
இந்திய ஆடவா் கால்பந்து அணி, சா்வதேச நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் தாய்லாந்துடன் ஜூன் 4-ஆம் தேதி அதன் மண்ணில் விளையாடுகிறது.
ஜோா்டானில் நடைபெறும் ஆசிய ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 10 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கங்கள் வென்றது.
பிரபல இந்திய துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளா் சன்னி தாமஸ் (84), மாரடைப்பு காரணமாக கோட்டயத்தில் புதன்கிழமை காலமானாா்.