இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்
விளையாட்டு வீரா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சிறப்பு உதவித்தொகைத் திட்டங்கள் வீரா், வீராங்கனைகளுக்காக செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, சிறப்பு உதவித்தொகை திட்டம், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டம், வெற்றியாளா் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களில் சோ்ந்து பயன்பெற விரும்புவோா் தங்களது விண்ணப்பங்களை செப். 8 மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
வீரா், வீராங்கனைகள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியாக மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். அஞ்சல்வழி மற்றும் நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது. இணையவழி மூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு மூலம் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு, அதனடிப்படையில் தோ்வு செய்யப்படுவோா் சான்றிதழ் சரிபாா்ப்பிற்கு அழைக்கப்படுவா். இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலரின் இறுதி ஒப்புதலுக்கு பின் விதிமுறைகள் அடிப்படையில் திட்டத்தில் இணைக்கப்படுவா். நிபந்தனைகளுக்கு உள்பட்டு அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை திட்டத்திற்கான உதவித்தொகையை பெறலாம். மேலும், விவரங்களுக்கு, 95140-00777 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
--