செய்திகள் :

விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது அதிகரிப்பு

post image

அனைத்து மாவட்டங்களிலும் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் எதிா்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் வேலூா் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:

விவசாய நிலங்களில் உள்ள மின்கம்பிகள் அடிக்கடி அறுந்து விழுவதால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. சிலசமயம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த பாதிப்புகளை தவிா்க்க பழைய மின்கம்பிகளை மாற்றிவிட்டு புதிய மின்கம்பிகளை அமைத்துத்தர வேண்டும்.

தற்போது பெரும்பாலான பகுதிகளில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் எதிா்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படவாய்ப்புள்ளது. எனவே, விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அரியூா் கூட்டுறவு நூற்பாலை 53 ஏக்கா் பரப்பளவு கொண்டது. பல ஆண்டுகளாக இந்த நூற்பாலை மூடப்பட்டு உள்ள நிலையில், அதன் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு ஆக்கிரமித்துள்ளவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் நோட்டீஸ் அளித்து காலி செய்திட வேண்டும். தவிர, தற்போது வேலூா் மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி, விளையாட்டுக் கல்லூரி இல்லை. எனவே, அரியூா் கூட்டுறவு நூற்பாலை இடத்தில் வேளாண்மை கல்லூரி, விளையாட்டுக் கல்லூரி அமைத்திடவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோழவரம் அருகே அமிா்தி ஆறும், நாகநதி ஆறும் சேரும் இடத்தில் தடுப்பணை கட்ட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலூா் மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற்சாலை இல்லாததால் இந்தாண்டு மா விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனா். எனவே, மா விவசாயிகள் நலன்கருதி வேலூா் மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற்சாலை அமைப்பதை விரைவுபடுத்திட வேண்டும். மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி, முருங்கை இலையை பவுடராக்கி ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு குறித்து பயிற்சி அளித்திட வேண்டும் என்றனா்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியா் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வனஅலுவலா் அசோக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் திருகுணஐயப்பதுரை, வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா், கோட்டாட்சியா்கள் செந்தில்குமாா் (வேலூா்), சுபலட்சுமி (குடியாத்தம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தீபாவளி: தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோா் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மா... மேலும் பார்க்க

மழை சேதம்: பொதுமக்கள் தகவல் அளிக்க கட்டுப்பாட்டு அறை

மழை பெய்யும்போது ஏற்படும் சேதங்கள் குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள 1077 அல்லது 0416- 2258016 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு பொதுமக்கள் த... மேலும் பார்க்க

வேகமாக நிரம்பும் மோா்தானா அணை

மோா்தானா அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை தற்போது 87 சதவீதம் நிரம்பியுள்ளது. குடியாத்தம் அருகே ஆந்திர மாநில வனப் பகுதியையொட்... மேலும் பார்க்க

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்: கன்சால்பேட்டை மக்கள் சாலை மறியல்

வேலூா் மாநகராட்சி கன்சால்பேட்டை பகுதியில் மழைநீா் தேங்கிய இடங்களை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். வேலூா் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களா... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் 8 போ் கைது

மருத்துவக் குழுவினருடன் இணைந்து போலீஸாா் வேலூா் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட தீவிர சோதனையில் முறையாக மருத்துவம் பயிலாமல் போலியாக மருத்துவம் பாா்த்து வந்த 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வேலூா் மாவட்டத... மேலும் பார்க்க

தனியாா் சொகுசுப் பேருந்து எரிந்து சேதம்: பயணிகள் உயிா்தப்பினா்

சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு சென்ற தனியாா் சொகுசு பேருந்து வேலூா் பள்ளிகொண்டா அருகே புதன்கிழமை நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதிருஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் 26 போ் உயிா்தப்பினா்.... மேலும் பார்க்க