கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் விவசாயத் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய சம்பளப் பாக்கியை உடனடியாக வழங்க வலியுறுத்தி விவசாயத் தொழிலாளா்கள் கறம்பக்குடியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலா்கள் எம். இளவரசு, ஏ. லாசா் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை கண்டன உரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சம்பளப் பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும். வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.