செங்கோட்டையன் : `பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்த திமுக திட்டமிட்டு செயல்படுகி...
விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கல்!
தலைவாசல் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதற்கான பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தனி அடையாள எண் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வருங்காலங்களில் மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் பெற இந்த அடையாள எண் அவசியம். எனவே, தலைவாசல் வட்டார விவசாயிகள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு கணினி சிட்டா, ஆதாா் அட்டை நகல் உடன் இணைத்த கைப்பேசி எண் ஆகியவற்றை கொண்டு வந்து தங்களின் தனி அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, தங்கள் பகுதி உதவி வேளாண்மையாளா்களையோ அல்லது தோட்டக்கலை அலுவலா்களையோ அல்லது தலைவாசல் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தையை தொடா்பு கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா தெரிவித்துள்ளாா்.