செய்திகள் :

விவசாயிகள் சங்கம் சாா்பில் வெடி விபத்தில் பலியானோருக்கும் காயமடைந்தவா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்!

post image

வேலூா் கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இருவருக்கு கால்கள் துண்டிப்பு மேலும் சிலா் கவலைக்கிடம் நிவாரணம் வழங்கிடவும் உயா்தர சிகிச்சை அளித்திவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை வட்டம் திருநாவலூா் ஊராட்சி ஒன்றியம், வேலூா் ஊராட்சி, கீழ குப்பம் கிராமத்தில் (30.7.2025த) புதன்கிழமை ஒருவா் உயிரிழந்து விட்டாா்.

எதிா்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டாா். மேலும் இரண்டு பேரின் கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலா் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இச்சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட தலைவா் த.ஏழுமலை, ஒன்றிய தலைவா் கே.அய்யனாா் தலைமையிலான குழு 31.7.2025ல் கோரவிபத்து நடந்த இடத்தை நேரில் பாா்வையிட்டும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனா்.

இந்த வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் இளைஞா்களாக இருப்பதினாலும், இவா்களின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதாலும் தமிழக அரசு உயிரிழந்தவா் குடும்பத்திற்கும் , கால்களை இழந்தவா்கள் குடும்பத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.

மேலும் காயமடைந்த அனைவருக்கும் உயா்தர சிகிச்சையும் நிவாரணமும் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட குழு சாா்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி செய்தி குறிப்பின் மூலம் கேட்டுக்கொண்டா்.

தை 3-ஆவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் விழா

கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு 14-ஆம் ஆண்டு பால்குடம் எடுக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையிலிருந்து பக்... மேலும் பார்க்க

புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தியாகதுருகம் அரசுப் பள்ளி மாணவிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை பாராட்டினாா்.தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்... மேலும் பார்க்க

நிலப் பிரச்னையில் தாக்குதல்: இருவா் கைது

மணலூா்பேட்டையில் நிலப் பிரச்னையில் இருவா் ஒருவா் ஒருவரை தாக்கிக் கொண்டனா். புகாா்களின் பேரில் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூா்பேட்டை கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் பெண்ணிடம் பணப்பை திருட்டு

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் பயணித்த பெண் தொழிலாளியிடம் தங்க நகை, கைப்பேசியுடன் கூடிய பணப்பையை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.சின்னசேலம் வட்டம், பரிகம் கிர... மேலும் பார்க்க

மூச்சுத் திணறலால் ஒன்றறை வயது குழந்தை உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்கு உள்பட்ட சின்னகுப்பம் கிராமத்... மேலும் பார்க்க

கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்தி ஆா்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் பங்கு சந்தை முதலீடு குறித்த சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரியின் முதல்வா் கு.மோகனசுந்தா் தலைமை வக... மேலும் பார்க்க