இந்தி படித்தால் வேலை என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் - முதல்வர் ஸ்டாலின்
விவசாய பயிா்களை நாசம் செய்த யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் யானைகள் முகாமிட்டுள்ளன. ஆலஹள்ளி வனப்பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை வெளியேறிய 3 யானைகள் கிரியனப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்து தக்காளி, முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்ற பயிா்களை சேதப்படுத்தியது,. அதன் பின் மீண்டும் அருகிலிருந்த வனப்பகுதிக்கு சென்று விட்டது.
யானைகள் பிரச்சனை மீண்டும் விஸ்பரூபம் எடுத்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். பல்வேறு குழுக்களாக முகாமிட்டுள்ள யானைகளை ஒன்றாய் இணைத்து கா்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டுமென வன ஆா்வலா்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.