செய்திகள் :

வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள்; வெளிநாட்டில் இருந்தபடியே கொள்ளையை முறியடித்த நபர்; என்ன நடந்தது?

post image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர் சலீம். இவர் மஸ்கட் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது வீடு கோட்டார் ரஹமத் கார்டன் பகுதியில் அமைந்துள்ளது. வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். மேலும், வீட்டுக்கு உள்ளேயும், வெளியைவும் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி இண்டெர்நெட் உதவியுடன் தனது செல்போனில் கண்காணித்து வந்துள்ளார் சலீம்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததைச் சாதகமாகப் பயன்படுத்தி நேற்று முன்தினம் (ஜனவரி 1) நள்ளிரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டில் உள்ள அறைகளின் கதவுகளை ஒன்றொன்றாக உடைத்துள்ளனர். ஒரு கம்பியை வைத்து பீரோவை உடைக்க முயன்றனர். வெளிநாட்டிலிருந்த சலீம் வழக்கம்போல தனது மொபைல் போனில் வீட்டின் சி.சி.டி.வி கட்சிகளை லைவ்வாக பார்த்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இரண்டு நபர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த நபர்கள் வீட்டின் வெளியிலிருந்த கேமராவை உடைப்பதும் தெரியவந்தது.

சிசிடிவி கேமராவை உடைக்கும் காட்சி

இதனை அடுத்து துரிதமாகச் செயல்பட்டு கோட்டாரில் உள்ள தனது வீட்டின் பக்கத்து வீட்டினரை செல்போனில் தொடர்புகொண்டு தனது வீட்டில் திருடன் இருப்பதைத் தெரியப்படுத்தி உள்ளார். உடனடியாகப் பக்கத்து வீட்டினர் தங்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து, "திருடன்.. திருடன்.." எனக் கூச்சலிட்டனர்.

மேலும், டார்ச் லைட்டை வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளில் அடித்தனர். இதனால் வீட்டுக்குள்ளும் வெளிச்சம் பரவியது. வீட்டுக்குள் திருட நுழைந்த விவரம் அக்கம்பக்கத்தினருக்குத் தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்த திருடர்கள், பதறி அடித்துக்கொண்டு வீட்டின் முன்பக்கம் ஓடினர். அங்கிருந்துதான் சத்தம் வருகிறது என்பதை உணர்ந்த திருடர்கள் வீட்டின் பின்பக்க வாசல் வழியாகத் தப்பித்து ஓடினர்.

பீரோவை உடைக்க முயன்ற காட்சி

இது தொடர்பாக கோட்டார் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் கொள்ளை முயற்சி நடந்ததை அடுத்து சலீம் வெளிநாட்டிலிருந்து வர உள்ளார். அதே சமயம் திருடர்கள் வேறு எதாவது எடுத்துச் சென்றார்களா என்பதும் அவர் வந்த பிறகே தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தொழில்நுட்ப உதவியுடன் வீட்டில் நடக்க இருந்த கொள்ளையை வெளிநாட்டிலிருந்து கண்காணித்து முறியடித்த சலீமின் செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

சென்னை: தொழிலதிபரை நம்பவைத்து ரூ.10 லட்சம் மோசடி; `சென்ட்டிமென்ட்' சங்கர் சிக்கியது எப்படி?

திருச்சி மாவட்டம், இளங்காகுறிச்சி, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது நசுருதீன் (43). இவர் கட்டட பொருள்கள் சப்ளை மற்றும் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு தொழில் முறையில் சுதன் என்பவர் மூல... மேலும் பார்க்க

இலங்கை: கிலோ கணக்கில் தொடர்ந்து சிக்கும் தங்கம்; `பாக் நீரிணை’ பகுதியும் தங்கம் கடத்தலும்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கடல் வழியாக போதை பொருட்களான கஞ்சா, போதை மாத்திரைகள், வலிநிவாரணி மாத்திரைகள், பீடி பண்டல்கள், தங்க கட்டிகள் ஆகியன கள்ளத்தனமாக கடத்தி செல்வது வாடிக்கையாகி வருகிறது. இந... மேலும் பார்க்க

கோவை: கரூர் கம்பெனி Vs டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் - வெடிக்கும் பஞ்சாயத்து

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ம் ஆண்டு சிறைக்கு செல்வதற்கு முன்பு டாஸ்மாக் துறையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பார் உரிமையாளர்களிடம் கறார் வசூல், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங... மேலும் பார்க்க

ISKCON: ஆரம்பத்தில் சின்ன சின்னதாய்; இப்போது லட்சக்கணக்கில் - கோயில் பணத்துடன் ஓட்டம் பிடித்த ஊழியர்

ஆக்ராவில் லட்சக்கணக்கில் கோயில் பணத்தை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி உள்ளார் இஸ்கான் ஊழியர் ஒருவர். ஆக்ரா பிருந்தாவனத்தில் உள்ள இஸ்கான் அமைப்பில் 2019-ம் ஆண்டு சேர்ந்துள்ளார் முரளிதர் தாஸ் என்பவர். இந்த சம... மேலும் பார்க்க

`மனைவிக்கு பாடம் கற்பிக்கிறேன்' - பெற்றோர் வீட்டுக்குச் சென்று திரும்பி வராததால் கணவர் விபரீத முடிவு

குஜராத்தில், மனைவிக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று கணவன் தூக்குபோட்டுத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் அவர் செல்போன் வீடியோ மூலம் தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. போலீஸாரின் கூற்றுப்படி, பொடாட் ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்; பனியன் நிறுவனத்தில் பணி... திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் 6 பேர் கைது!

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். அதிலும், குறிப்பாக மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ம... மேலும் பார்க்க