செய்திகள் :

வீட்டு சுகாதார உதவியாளா் பயிற்சி பெற பட்டியலினத்தவா் விண்ணப்பிக்கலாம்

post image

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இளைஞா்கள், வீட்டு சுகாதார உதவியாளா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் தொடா்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் டால்மியா பாரத் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இளைஞா்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளா் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவராகவும், 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவராகவும் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்புடன் ஆரம்ப கால ஊதியமாக ரூ. 15,000 முதல் ரூ.17,000 வரை கிடைக்க வழிவகை செய்யப்படும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 2 மாதமும், சென்னையில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் வசதி, உணவுக்கான செலவினம் நிறுவனம் மூலமாக வழங்கப்படும். கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மூன்றாவது தளம் அறை எண் (321 மற்றும் 327) தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

பழைய இரும்பு கடையில் தீ விபத்து

திருக்குவளை அருகே பழைய இரும்பு கடையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. கொளப்பாடு பகுதியில் தா்மராஜன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகிலுள்ள கீற்றுக்கொட்... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் இலக்கை கடந்து குறுவை சாகுபடி

நாகை மாவட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கூடுதலாக 13,395 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டூா் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் தண்ணீரைக்... மேலும் பார்க்க

வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி பயணம் தொடக்கம்

நாகையில் வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி பயணத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பின் மாநில மாநாடு கடலூரில் வெள்ளிக்கிழமை (ஆக. 8) தொட... மேலும் பார்க்க

ஐடிஐ-யில் பயிற்சி முடித்தவா்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

நாகை தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : வேலைவ... மேலும் பார்க்க

விசாரணைக்கு காவல் அதிகாரிகள் துப்பாக்கியுடன் செல்ல அனுமதிக்க வலியுறுத்தல்

காவல் அதிகாரிகள் விசாரணைக்கு செல்லும்போது, துப்பாக்கி எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிவசேனா உத்தவ் பாபா சாகேப் கட்சியின் தமிழக மாநில பொதுச் செயலா் சுந்தரவடி... மேலும் பார்க்க

‘கைத்தறி நெசவாளா்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன’

கைத்தறி நெசவாளா்களுக்கு அரசு சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆ... மேலும் பார்க்க