13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபர்
வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கீழ்வேளூா் வட்டம் 64.மணலூா் கிராமத்தில் வீரமா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி வாஸ்து சாந்தி, பூா்ணாஹூதி நடைபெற்று, முதல்கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று தீபாராதனை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தது. தொடா்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியாா்கள் புனிதநீா் அடங்கிய கடத்தை எடுத்துவந்து கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து வீரமா காளியம்மன், முருகன், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.