பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
வீரர்களின் தியாகங்கள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்: மோடி
புது தில்லி: கார்கில் போரில் நமது வீரர்கள் செய்த தியாகங்கள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும், விஜய் திவாஸ், இந்தியத் தாயின் துணிச்சலான மகன்களின் ஒப்பற்ற துணிச்சலையும், வீரத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு கார்கில் போரில் தைரியத்துடனும் வீரத்துடனும் போராடிய வீரர்களின் தியாகங்களை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை நினைவு கூர்ந்தார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாட்டு மக்களுக்கு கார்கில் வெற்றி நாள் வாழ்த்துகள்."கார்கில் போரில் நாட்டின் பெருமையைப் பாதுகாக்க தங்கள் உயிரை அர்ப்பணித்த இந்தியத் தாயின் துணிச்சலான மகன்களின் ஒப்பற்ற துணிச்சலையும் வீரத்தையும் இந்த நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது. தாய்நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற அவர்களின் ஆர்வம் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்" ஜெய் ஹிந்த்! என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
கடந்த 1999-ஆம் ஆண்டு, பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் பங்கேற்று நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் வெற்றி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நாட்டின் இதயத்தில் பெருமையுடனும், புனிதமான நினைவுகளுடனும் பொறிக்கப்படும் ஒரு நாள்.