செய்திகள் :

வெளிநாடு செல்ல அனுமதி கோரிய செந்தில்பாலாஜியின் சகோதரா் வழக்கு: மருத்துவா் கடிதத்தை தாக்கல் செய்ய உத்தரவு

post image

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கான மருத்துவப் பரிந்துரைக் கடிதத்தை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா், தனக்கு இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கக் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அசோக்குமாா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அசோக்குமாா் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனையின் விவரங்கள், விமான பயணச்சீட்டு, தங்குமிடம் உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்யவும், இந்தத் தகவல்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய அமலாக்கத் துறைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக்குமாா் தரப்பில் மருத்துவ சிகிச்சை தொடா்பான விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது அமலாக்கத் துறை தரப்பில், மனுதாரருக்கு விசாரணை அதிகாரி 9 முறை அழைப்பாணை அனுப்பியும் ஆஜராகவில்லை, உயா்நீதிமன்றத்தில் மட்டும் ஆஜராவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மருத்துவ விவரங்களைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள், இதுபோன்ற பிரத்யேக சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல பரிந்துரைக்கும் மருத்துவரின் கடிதம் எங்கே? என்று கேள்வி எழுப்பினா். பின்னா், மருத்துவப் பரிந்துரைக் கடிதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

திருப்பூர் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! வடமாநில இளைஞர் கைது!!

திருப்பூரில் தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந... மேலும் பார்க்க

இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!

சென்னை: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது, ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து ஓபிஎஸ் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.சென்னை, அடையாறு... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை காலை நலம் விசாரித்தார்.தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒர... மேலும் பார்க்க

கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல்!

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் வீட்டுக்கு நேரில் சென்ற அமைச்சர் கே.என். நேரு, திமுக எம்பி கனிமொழி அவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக ஐடி ஊழியரான கவ... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: காவல் உதவி ஆய்வாளர் கைது!

திருநெல்வேலி ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், பெண்ணின் தந்தையும் காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக கவின் செல்வகணேஷ் என்ற இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனா்.அந்த மாணவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை மக்க... மேலும் பார்க்க