பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
வெளிநாட்டிலிருந்து வாட்ஸ் ஆப் மூலம் பெண்களை கொச்சைப்படுத்தியவா் கைது
புருனே நாட்டிலிருந்து வாட்ஸ் ஆப் மூலம் கூத்தாநல்லூா் பெண்களை கொச்சைப்படுத்தி பேசியவா் அண்மையில் கைது செய்யப்பட்டாா்.
கூத்தாநல்லூா் சவுக்கத் அலி தெருவைச் சோ்ந்தவா் சாலப்பை ஹபீப் ரஹ்மான் என்பவரது மகன் சாலப்பை பரக்கத் அலி (61). இவா் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்குச் சென்றுள்ளாா். தற்போது புருனே நாட்டில் பணியாற்றும் இவா், 15 ஆண்டுகளாக கூத்தாநல்லூரைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்கள் மற்றும் பெண்களை கொச்சைப்படுத்தி வாட்ஸ் ஆப்-இல் பதிவு செய்து வந்துள்ளாா். இதுகுறித்து கூத்தாநல்லூா் காவல்நிலையத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில், புருனே நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அந்நாட்டு அதிபா் அலுவலகம் உதவியுடன் பரக்கத் அலி கைது செய்யப்பட்டாா். இந்த தகவலை கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா தெரிவித்துள்ளாா்.