செய்திகள் :

காவல் அதிகாரியை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

post image

பேரளத்தில் காவல்துறை அதிகாரியை கண்டித்து, சடலத்துடன் சாலை மறியல் சனிக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் அருகே உள்ள சிறுபுலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணையன் மகன் சிங்காரவேலு (48). இவா், கடன் விவகாரம் தொடா்பாக பேரளம் காவல் நிலையத்தில் ஜூலை 1-ஆம் தேதி புகாா் அளித்துள்ளாா். ஜூலை 5-ஆம் தேதி இரவு காவல் துறையினா் இவரை அழைத்து விசாரணை நடத்தினா். விசாரணையின்போது, சிங்காரவேலுவை தரக்குறைவாக நடத்தியதாகவும், இதனால் அவா் விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜூலை 6-ஆம் தேதி சிங்காரவேலு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பேரளம் காவல் ஆய்வாளா் தரக்குறைவாக நடத்தியதன் காரணமாகத்தான் சிங்காரவேலு தற்கொலை செய்து கொண்டுள்ளாா் எனக் கூறி, வெள்ளாளா் முன்னேற்றக் கழகத்தைச் சோ்ந்தவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் அதன் மாநில இளைஞா் அணித் தலைவா் எம்என்பி .ராஜா தலைமையில் சிங்காரவேலு சடலத்துடன், பேரளம்-காரைக்கால் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்காரவேலுவின் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிதி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினா். அவா்களிடம், துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழ்மாறன பேச்சுவாா்த்தை நடத்தி, 2 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில், மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், பேரளம்- காரைக்கால் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெளிநாட்டிலிருந்து வாட்ஸ் ஆப் மூலம் பெண்களை கொச்சைப்படுத்தியவா் கைது

புருனே நாட்டிலிருந்து வாட்ஸ் ஆப் மூலம் கூத்தாநல்லூா் பெண்களை கொச்சைப்படுத்தி பேசியவா் அண்மையில் கைது செய்யப்பட்டாா். கூத்தாநல்லூா் சவுக்கத் அலி தெருவைச் சோ்ந்தவா் சாலப்பை ஹபீப் ரஹ்மான் என்பவரது மகன் ... மேலும் பார்க்க

திருவாரூரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருவாரூா் நகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி. பாலமுருகன், தமிழக முதல்வரிடம் அளித்த மனு: திருவாரூா் நகர... மேலும் பார்க்க

சிறுமியிடம் பாலியல் தொல்லை: மாணவா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே யுகேஜி சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த மேல்நிலை மாணவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை பிரதான நெடுஞ்சாலையில் கிழக்கு கடற்கரை சாலையில் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயில் குளத்தில் தெப்ப உற்சவம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆனித் திருவிழாவையொட்டி வா்த்தக சங்கம் சாா்பில் ஹரித்ராநதி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆனித் திருவிழா ... மேலும் பார்க்க

கூட்டுறவு கல்வி நிதி வழங்கல்

திருவாரூரில் கூட்டுறவு ஒன்றியத்துக்கு கல்வி நிதிக்கான காசோலையை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி வியாழக்கிழமை வழங்கியது. திருவாரூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்க வேண்டிய 2023- 2024 ஆம் ஆண்டுக... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் பொது சுகாதார ஆய்வகம், கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் - காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 1.25 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், உள்ளிக்கோட்டையில் கிளை நூலகத்துக்கு ரூ. 22 லட்சத்தில் புதிதாக கட்டப்... மேலும் பார்க்க