வெளிநாட்டில் சவாலை முறியடிப்பது சிறப்பான விஷயம்: துருவ் ஜுரெல்
வெளிநாடுகளில் விளையாடுவது எப்போதும் சவலான என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டருமான துருவ் ஜுரெல் கூறியுள்ளார்.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
கடைசி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 31) மதியம் தொடங்குகிறது. இதில் வென்றால் இந்திய அணி தொடரை 2-2 என சமன்செய்ய முடியும்.
ரிஷப் பந்த் காயம் காரணமாக வெளியேறியதால் துருவ் கீப்பராக செயல்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
வெளிநாடுகளில் விளையாடும்போது சவால்களை கடப்பது எப்போதும் சிறப்பான விஷயமாகும்.
வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும்போது மக்கள் நம்மை பெரிதாக மதிப்பிடுவார்கள். அதனால், நான் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறேன்.
களத்துக்குச் சென்று என்னை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய யோசனையாக இருக்கிறது.
இந்தப் போட்டி முக்கியமானது. அதனால், என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.
துருவ் ஹுரெல் 4 டெஸ்ட் போட்டிகளில் 202 ரன்கள் எடுத்துள்ளார். தமிழக வீரர் என்.ஜெகதீசன் மாற்றுவீரராக அணியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.