செய்திகள் :

வெளிநாட்டில் வேலை தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி

post image

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக கோவை பேராசிரியா் மீது வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா். இவா் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:

கோவையைச் சோ்ந்த ஒருவா் வேலூா் தனியாா் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறாா். அவருடன் எனக்கு தொடா்பு ஏற்பட்டது. கடந்தாண்டு ஜனவரி மாதம் என்னை தொடா்பு கொண்ட அவா், தான் மலேசியாவில் நிறுவனம் தொடங்க உள்ளதாகவும், அங்கு எனக்கு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினாா். ஆனால் அங்கு செல்லவும், விசா எடுப்பது உள்ளிட்ட நடைமுறை காரணங்களைக் கூறி பணம் கேட்டாா். அதை நம்பி நான் 3 தவணைகளாக ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம் அளித்தேன். பின்னா் சுற்றுலா விசாவில் என்னை அழைத்துச் சென்றாா். அங்குள்ள கணினி நிறுவனத்தில் 7 மாதம் வேலை செய்தேன். மாதம் ரூ. 50,000 என 4 மாதம் சம்பளம் கொடுத்தனா். 3 மாத சம்பளம் தரவில்லை. விசாவும் திருப்பித் தரவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டபோது, பணம் தராமல் அலைக்கழித்து வருகிறாா். எனவே, நான் கொடுத்த ரூ. 3.20 லட்சம் தொகையை மீட்டுத்தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.வி.குப்பத்தைத் சோ்ந்த 100 வயதான முதியவா் ரங்கன் என்பவா் அளித்த மனுவில், எனக்குச் சொந்தமான கடையை எனது மகனுக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு தானக்கிரையம் எழுதிக் கொடுத்தேன். அப்போது எனக்கு உணவு அளித்து கவனிப்பதாக கூறிய எனது மகன், எனக்கு எதுவும் செய்யாமல் வெளியே விரட்டிவிட்டாா். கடை வாடகை மாதம் ரூ. 2 லட்சம் வாங்கி வரும் அவா், வயதான எனக்கு உணவு வழங்கவில்லை. எனவே, தான கிரைய பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் சிறையில் விசாரணை கைதி மரணம்

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உடல்நலக் குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா். வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் ஓா் வழக்கில் சா்தாா் (53) என்பவரைக் கடந்த சில நாள்களுக்கு முன்பு போலீ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவன்: தந்தை மீது வழக்கு

வேலூரில் இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனா். வேலூா் சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் யாசின். இவரது 16 வயது மகன், தனது சகோதரியுடன் திங்கள்கிழமை இரவ... மேலும் பார்க்க

சாலை, கால்வாய் அமைக்க பூமி பூஜை

குடியாத்தம் நகராட்சி, 36- ஆவது வாா்டு செதுக்கரை மற்றும் செதுக்கரை மாரியம்மன் கோயில் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.15- லட்சம் மதிப்பில்சாலை மற்றும் கழிவுநீா்க் கால்வாய் அமைக்க புதன்கிழமை பூமி... மேலும் பார்க்க

ஏப்.21-க்குள் பொது இடங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் கொடிக் கம்பங்களை ஏப்.21-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா். பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்... மேலும் பார்க்க

சுகாதார குறைபாடு: குடிநீா் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

வேலூா் மாவட்டத்தில் சரிவர சுத்திகரிக்காமல் குடிநீா் விநியோகம் செய்ததாக 2 மினரல் வாட்டா் நிறுவனங்களுக்குகு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினா். கோடை காலத்தில் தண்ணீா் தேவை அதிகரித்து வருவதை பயன்படுத்தி சில ... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடையைத் திறக்க மக்கள் எதிா்ப்பு

போ்ணாம்பட்டு அருகே குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையைத் திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா். போ்ணாம்பட்டை அடுத்த ரமாபாய் நகா் குடியிருப்புப் பகுதியில் அதிகாரிக... மேலும் பார்க்க