காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
வெள்ளகெவி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்
கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை நேரிடையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கொடைக்கானல் அருகே வெள்ளகெவி கிராமம் வனப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் குதிரை மூலமாக விவசாய பொருள்கள், உணவுப் பொருள்களை கொடைக்கானலுக்கு எடுத்துச் சென்று வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளகெவி கிராம மக்கள் 8 கி.மீ. தொலைவுள்ள வட்டக்கானல் பகுதிக்கு நடந்தோ அல்லது குதிரை மூலமாகவோ சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வந்தனா். இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனா்.
இந்த நிலையில், ரேஷன் பொருள்களை வெள்ளகெவி கிராமத்துக்கே சென்று வழங்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இவா்களின் கோரிக்கையை ஏற்று, வட்டக்கானலிலிருந்து குதிரை மூலமாக ரேஷன் பொருள்கள் வெள்ளகெவி கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது. பின்னா், கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, நகா்மன்றத் துணைத் தலைவா் மாயக்கண்ணன், குடிமைப் பொருள் வட்டாட்சியா் சரவணவாசன் ஆகியோா் கிராம மக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினா். இதையடுத்து, வெள்ளகெவி கிராம மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.